ரூ. 8,999 விலையில் இப்படி ஒரு புது சாதனமா? Moto E32s வாங்க சரியான நேரம் இது தான்.. நீங்க ரெடியா?

|

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலான Moto E32s இந்தியாவில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய மோட்டோரோலா போன், தற்போதுள்ள Moto E32 ஐ விட சற்று மாற்றியமைக்கப்பட்ட புதிய பதிப்பாகும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த சாதனம் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இதன் விற்பனை அடுத்த வாரம் துவக்கத்தில் இருந்து துவங்கப் போகிறது. இந்த சாதனத்தின் சிறப்பு, விலை மற்றும் முழு விபர தகவலைப் பார்க்கலாம்.

Moto E32s வாங்க சரியான நேரம் இது தான்

Moto E32s வாங்க சரியான நேரம் இது தான்

மோட்டோ இ32எஸ் (Moto E32s) ஸ்மார்ட்போன் 90Hz டிஸ்பிளே உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது. Moto E32s ஆனது octa-core MediaTek Helio G37 சிப்செட் உடன் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது. இரண்டு வருடப் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெற மோட்டோரோலாவின் உத்தரவாதத்துடன் இது வருகிறது. இந்த புதிய Moto E32s குறைந்த முனையில் Redmi 10A மற்றும் உயர் இறுதியில் Realme C31 மற்றும் Redmi 10 உள்ளிட்ட மாடல்களுக்கு எதிராக இந்தியாவில் போட்டியிடும் என்பது தெரிகிறது.

இந்தியாவில் Moto E32s விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இந்தியாவில் Moto E32s விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இந்தியாவில் Moto E32s ஸ்மார்ட் போனின் அடிப்படை ஸ்டோரேஜ் மாடல் 3ஜிபி ரேம் + 32ஜிபி சேமிப்பு உடன் ரூ. 8,999 என்ற ஆரம்ப அறிமுக விலையில் வருகிறது. இருப்பினும், இந்த அறிமுக விலை நிர்ணயம் செல்லுபடியாகும் காலம் குறித்து மோட்டோரோலா நிறுவனம் இன்னும் எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. அறிமுகம் விலையின் காலம் முடிந்த பின் இந்த சாதனம் என்ன விலை இருக்கும் என்பதும் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இந்த சாதனத்தின் இப்போதைய விலை இது தான்.

நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..

எப்போது முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கும்?

எப்போது முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கும்?

அதேபோல், இந்த ஸ்மார்ட் போனின் மற்றொரு மாறுபாடான 4ஜிபி + 64ஜிபி மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ. 9,999 ஆகும். Moto E32s ஸ்மார்ட்போன் மிஸ்டி சில்வர் மற்றும் ஸ்லேட் கிரே வண்ணங்களில் வருகிறது. மேலும், இந்த புதிய Moto E32s ஸ்மார்ட்போன் சாதனம் வரும் ஜூன் 6 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் Flipkart, Jio Mart, Jio Mart Digital மற்றும் Reliance Digital ஆகிய தளங்களில் இருந்து வாங்குவதற்குக் கிடைக்கும். பட்ஜெட் விலையில் சிறந்த சாதனம் வாங்க நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.

Moto E32s சிறப்பம்சம்

Moto E32s சிறப்பம்சம்

இந்த மாத தொடக்கத்தில், Moto E32s ஐரோப்பாவில் EUR 149.99 (இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 12,400) என்ற ஆரம்ப விலையுடன் அறிமுகமானது. Moto E32s ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் பற்றிப் பார்க்கையில், இந்த புதிய சாதனம் 6.5' இன்ச் HD+ ஆதரவுடன் 720 x 1,600 பிக்சல்கள் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 20:9 விகிதமும் 90Hz புதுப்பிப்பு வீதமும் கொண்டுள்ளது. இந்த சாதனம் இதன் விலைக்கு சக்தி வாய்ந்த MediaTek Helio G37 சிப்செட், 680MHz IMG PowerVR GE8320 GPU மற்றும் 4GB வரை LPDDR4X ரேம் மூலம் இயக்கப்படுகிறது.

உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..

Moto E32s கேமரா அம்சம்

Moto E32s கேமரா அம்சம்

Moto E32s ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் பற்றிப் பார்க்கையில், இது 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உடன் f/2.2 லென்ஸுடன் 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு, Moto E32s ஆனது f/2.0 லென்ஸுடன் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சாருடன் வழங்குகிறது. பின்புற மற்றும் முன் கேமராக்கள் இரண்டும் போர்ட்ரெய்ட், பனோரமா, புரோ மற்றும் நைட் விஷன் உள்ளிட்ட அம்சங்களை ஆதரிக்கின்றன.

Moto E32s ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரி அம்சம்

Moto E32s ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரி அம்சம்

பின்புற கேமராவில் எல்இடி ஃபிளாஷ் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 30fps பிரேம் வீதத்தில் முழு-எச்டி வீடியோ பதிவு வரை ஆதரிக்கிறது. Moto E32s ஆனது 64GB வரையிலான உள் சேமிப்பகத்துடன் வருகிறது. இது microSD கார்டு வழியாக 1TB வரை பிரத்தியேக ஸ்லாட் மூலம் விரிவாக்கத்தை ஆதரிக்கிறது. Moto E32s இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத் v5.0, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும். Moto E32s ஆனது 5,000mAh பேட்டரியுடன் வருகிறது மற்றும் 10W சார்ஜருடன் இணைக்கப்பட்டுள்ளது.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

Best Mobiles in India

English summary
Moto E32s With Triple Rear Cameras Launched in India At Starting Price Of Rs 8999 Only : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X