Home
Mobile

பட்ஜெட் விலையில் களமிறங்கும் மோட்டோ இ32 போன்: எப்போது அறிமுகம் தெரியுமா?

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் வரும் அக்டோபர் 7-ம் தேதி புதிய மோட்டோ இ32 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

புதிய மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் 720x1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்.

மீடியாடெக் சிப்செட்

மீடியாடெக் சிப்செட்

புதிய மோட்டோ இ32 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் கொடுக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த அசத்தலான மோட்டோ ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ போன்.

 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ32 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த மோட்டோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு எஸ்டி கார்டு ஸ்லாட் கிடைக்கும்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும் இந்த மோட்டோ இ32 ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த
மோட்டோ ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

குறிப்பாக 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ இ32 ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீல நிறத்தில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ இ32

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த புதிய மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் ரூ.12,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த மோட்டோ இ32 ஸ்மார்ட்போன்.

அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் விரைவில் பட்ஜெட் விலையில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Moto E32 smartphone will be launched in India on October 7: Specifications, Price and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X