கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.8999க்கு தரமான செய்கை செய்த Moto! யோசிக்காம வாங்கலாம்

|

Moto E22s ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.8999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனை தளங்களில் இந்த புதிய போன் அக்டோபர் 22 முதல் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் கம்மி விலையில் இப்படி ஒரு போன் என்பது உண்மையாகவே வரவேற்கத்தக்கது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ரூ.10,000 விலைப் பிரிவில் அறிமுகமான மோட்டோ ஸ்மார்ட்போன்

ரூ.10,000 விலைப் பிரிவில் அறிமுகமான மோட்டோ ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனம் இன்று இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான மோட்டோ இ22எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரூ.10,000 விலைப் பிரிவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது.

டூயல் ரியர் கேமரா அமைப்பு

டூயல் ரியர் கேமரா அமைப்பு

டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் பஞ்ச் ஹோல் செல்பி கேமரா ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

சமீபத்தில் ரூ.10,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ இ32 மாடலின் விலையை விட குறைந்த விலையில் இது அறிமுகமாகி இருக்கிறது.

Moto e22s விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Moto e22s விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Moto e22s மாடல் ஆனது இந்தியாவில் ரூ.8999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது அக்டோபர் 22 முதல் பிளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனை தளங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

64 ஜிபி என்ற ஒரே வேரியண்ட் இல் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனானது ஆர்க்டிக் ப்ளூ மர்றும் ஈகோ ப்ளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகமாகி இருக்கிறது.

ஸ்டைலான ப்ரீமியம் தர வடிவமைப்பு

ஸ்டைலான ப்ரீமியம் தர வடிவமைப்பு

மோட்டோரோலா நிறுவனம் ட்விட்டர் மூலமாக மோட்டோ இ22எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ இ22எஸ் ஸ்மார்ட்போனானது ஸ்டைலான ப்ரீமியம் தர வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

இதில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் டிஸ்ப்ளே உடன் 16 எம்பி ஏஐ ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

Moto e22s சிறப்பு அம்சங்கள்

Moto e22s சிறப்பு அம்சங்கள்

Moto e22s ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போனானது நான்கு ஏ53 1.8GHz கோர்கள் கொண்ட MediaTek Helio G37 octa-core CPU மூலம் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் ஆதரவுடன் 64 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

Moto e22s டிஸ்ப்ளே

Moto e22s டிஸ்ப்ளே

Moto e22s ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் 1600x720 தெளிவுத்திறன் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Moto e22s இன் கேமரா அம்சங்கள்

Moto e22s இன் கேமரா அம்சங்கள்

Moto e22s இன் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 16 எம்பி முதன்மை கேமரா உட்பட டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 2 எம்பி டெப்த் சென்சார் இரண்டாம் நிலை கேமராவாக இடம்பெற்றிருக்கிறது.

முன்பக்கத்தில் 8 எம்பி பஞ்ச் ஹோல் வசதியுடன் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

Moto e22s பேட்டரி

Moto e22s பேட்டரி

Moto e22s ஸ்மார்ட்போனின் பேட்டரி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பாக்ஸ் இல் சார்ஜிங் அடாப்டர் மற்றும் யூஎஸ்பி கேபிளும் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்ட் 12 ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Moto E22s Launched at Rs.8999 With 5000mAh battery and Stylish Premium Design

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X