ஆஹா! என்ட்ரி லெவல் போனே வேற லெவல்-ஆ இருக்கே.! புது Moto E22s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் புது ஸ்மார்ட்போன் மாடலை வாங்க தான் இப்போது மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இது இந்திய ஸ்மார்ட்போன் சந்தை மட்டுமின்றி, ஐரோப்பா போன்ற மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையிலும் இதே நிலை தான் நிலவுகிறது. மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்று சரியாக புரிந்துகொண்ட Motorola நிறுவனம் இப்போது Moto E22s என்ற புது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள புதிய Moto E22s ஸ்மார்ட்போன்

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள புதிய Moto E22s ஸ்மார்ட்போன்

ஆம், இந்த புதிய Moto E22s ஸ்மார்ட்போன் ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த Moto E22s இப்போது ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விரைவில் இந்த டிவைஸை மோட்டோரோலா இந்திய ஸ்மார்ட்போன் சந்தையிலும் அறிமுகம் செய்யவிருக்கிறது என்பதனால் இதன் விபரங்களைத் தெரிந்துகொள்வோம் வாங்க.

E சீரிஸ் வரிசையில் புது வரவாக Moto E32s

E சீரிஸ் வரிசையில் புது வரவாக Moto E32s

இது மோட்டோரோலாவின் E சீரிஸ் வரிசையில் சேரும் புதிய மாடலாகும். Motorola இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் Moto E32s என்ற மாடலை இதே E சீரிஸ் வரிசையில் அறிமுகப்படுத்தியது. இது 16MP பிரைமரி கேமரா, MediaTek Helio G37 சிப்செட், 6.5' இன்ச் IPS LCD டிஸ்பிளே மற்றும் 5,000mAh பேட்டரி உடன் வருகிறது. இது பேஸ் அன்லாக், பவர் பட்டன் உடன் ஒருங்கிணைந்த பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வருகிறது.

Jio 5G Phone அறிமுகத்தை உறுதி செய்தது ரிலையன்ஸ்.! என்ன விலையில் எப்போது வாங்கலாம்?Jio 5G Phone அறிமுகத்தை உறுதி செய்தது ரிலையன்ஸ்.! என்ன விலையில் எப்போது வாங்கலாம்?

Moto E22s சிறப்பம்சம்

Moto E22s சிறப்பம்சம்

Moto E22s ஸ்மார்ட்போன் HD+ தரத்துடன் 6.5' இன்ச் IPS LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே பஞ்ச் ஹோல் கட் அவுட் உடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. இது ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதனால் இதில் ஆக்டா கோர் MediaTek Helio G37 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது புதிய ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.

பெஸ்டான ஸ்டோரேஜ் மற்றும் சிறப்பான கேமரா

பெஸ்டான ஸ்டோரேஜ் மற்றும் சிறப்பான கேமரா

இந்த புதிய மோட்டோ E22s சாதனம் 4GB ரேம் கொண்டுள்ளது. Moto E22s சாதனம் 64GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இருப்பினும், உங்களுக்கு ஸ்டோரேஜ் பற்றிய கவலையே வேண்டாம், ஏனெனில் இது மைக்ரோ SD கார்டு மூலம் 1TB வரை கூடுதல் ஸ்டோரேஜை ஆதரிக்கிறது. இது 16MP பிரைமரி சென்சார் உடன் 2MP டெப்த் சென்சர் உடன் கூடிய டூயல் ரியர் கேமராவை கொண்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ காலிங்கிற்காக 8MP சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பூமியை விட ஆழமான கடல்கள்..2 சூரியனுடன் NASA கண்டுபிடித்த சூப்பர் எர்த்.! மனிதன் வாழ முடியுமா?பூமியை விட ஆழமான கடல்கள்..2 சூரியனுடன் NASA கண்டுபிடித்த சூப்பர் எர்த்.! மனிதன் வாழ முடியுமா?

என்ட்ரி லெவல் போனில் பெரிய சைசில் பேட்டரி

என்ட்ரி லெவல் போனில் பெரிய சைசில் பேட்டரி

இது 5,000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் உடன் வருகிறது. பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக, போனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் பேஸ் அன்லாக் அம்சமும் இதில் உள்ளது. சரி, இப்போது, இந்த புதிய ஸ்மார்ட்போன் என்ன விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம். இந்தியாவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை நாம் என்ன விலையில் வாங்கலாம் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

Moto E22s ஸ்மார்ட்போனின் விலை என்ன? இந்தியாவில் எப்போது இதை எதிர்பார்க்கலாம்?

Moto E22s ஸ்மார்ட்போனின் விலை என்ன? இந்தியாவில் எப்போது இதை எதிர்பார்க்கலாம்?

மோட்டோரோலா அறிவிப்பின் படி, மோட்டோ E22s சாதனம் ஒற்றை வேரியண்ட் மாடலாக 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் விலை EUR 159.99 ஆகும். இந்திய மதிபிபி படி இது தோராயமாக ரூ. 12,700 விலையாகும். இது ஆர்க்டிக் ப்ளூ மற்றும் ஈகோ பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்கள் கிடைக்கும். இந்தியாவில் இந்த சாதனம் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Moto E22s Entry Level Smartphone Launched With 5000mAh Battery Know The Price and Specifications Now

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X