Home
Mobile

Moto E22 போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு: தரமான அம்சங்கள்.!

மோட்டோரோலா நிறுவனம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி புதிய மோட்டோ இ22 (Moto E22) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 மோட்டோ இ22

மோட்டோ இ22

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த புதிய மோட்டோ இ22 ஸ்மார்ட்போன் ஆனது வெள்ளை மற்றும் நீல நிறங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

எல்சிடி டிஸ்பிளே

எல்சிடி டிஸ்பிளே

மோட்டோ இ22 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.

மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 பிக்சல்ஸ், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் புதிய மோட்டோ போன்
வெளிவரும் என்று கூறப்படுகிறது.

 மீடியாடெக் பிராசஸர்

மோட்டோ இ22 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோஸ்மார்ட்போன்.

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

விரைவில் அறிமுகமாகும் மோட்டோ இ22 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜி/128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

 ட்ரிபிள் ரியர் கேமரா

ட்ரிபிள் ரியர் கேமரா

குறிப்பாக இந்த மோட்டோ போன் டால்பி அட்மோஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோ இ22 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போன்.

பாஸட் சார்ஜிங் வசதி

பாஸட் சார்ஜிங் வசதி

மோட்டோ இ22 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 10W பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்ங்களை கொண்டுள்ளது மோட்டோ இ22 மாடல்.

  கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் வி4.2, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோ இ22 போன்.

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் தொடர்ந்து பல செல்போன் நிறுவனங்கள் 5ஜி போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றே கூறலாம். குறிப்பாக மோட்டோரோலா நிறுவனமும் தொடர்ந்து அதிகமான 5ஜி போன்களை அறிமுகம்செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Moto E22 smartphone will be launched in India on September 16: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X