Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.7500 போதும்.. 1TB மெமரி.. 15W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

மோட்டோ பிரியர்கள் மட்டுமல்லாமல், மலிவு விலை ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போடும்படி வெறும் ரூ.7,500 பட்ஜெட்டில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மட்டுமல்லாமல், 6 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் கொண்ட எச்டிபிளஸ் டிஸ்பிளே, ஆட்டோபோகஸ் மெயின் கேமரா போன்ற பீச்சர்களுடன் மோட்டோ ஈ14 (Moto E14) களமிறங்கி இருக்கிறது. இந்த மோட்டோவின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்ப்போம்.

மோட்டோ ஈ14 அம்சங்கள் (Moto E14 Specifications): இந்த மோட்டோவில் ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android14 Go edition) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core UNISOC T606 SoC) சிப்செட் வருகிறது. மீடியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆர்ம் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Arm Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.7500 போதும்.. 1TB மெமரி மாடல்!

இந்த மோட்டோ மாடலில் ரேம் பூஸ்ட் டெக்னாலஜி (RAM Boost Technology) வருகிறது. ஆகவே, 2 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொண்டிருக்கிறது. 64 ஜிபி மெமரி மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. டூயல் சிம் சிலாட் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் வருகிறது.

பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் வருகிறது. இந்த மோட்டோ ஈ14 போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் தொடர்ந்து 40 மணி நேரங்களுக்கு பேக்கப் எதிர்பார்க்கலாம். டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கொண்டிருக்கிறது.

6.56 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் வருகிறது.

பிடிஏஎப் (PDAF) சப்போர்ட் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. மெயின் கேமராவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD) ரெக்கார்ட் வருகிறது. போட்டோ, போர்ட்ராய்டு, பேஸ் ரீடச், எச்டிஐர் போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. செல்பீ ஷூட்டரிலும் ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம்.

இந்த மோட்டோவின் டிசைனை பொறுத்தவரையில், 7.99 மிமீ தடிமன் மற்றும் 178.8 கிராம் எடையில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. பிஎம்எம்ஏ (PMMA) பாடி கொண்டிருக்கிறது. IP52 வாட்டர் ரெப்பிலன்ட் டிசைன் வருகிறது. 3.5 மிமீ ஹெட்செட் ஜாக் (Headset Jack) மற்றும் பாட்டம் போர்டெட் சிங்கிள் ஸ்பீக்கர் (Bottom Ported Single Speaker) வருகிறது.

மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), மை யுஎக்ஸ் (My UX) கொண்டிருக்கிறது. 4ஜி எல்டிஇ (4G LTE), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன. இந்த மோட்டோவின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7,412ஆக இருக்கிறது.

கிராஃபைட் கிரே (Graphite Gray), பாஸ்டல் கிரீன் (Pastel Green) மற்றும் பாஸ்டர் பர்பிள் (Pastel Purple) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. முதலில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா உள்பட மற்ற நாடுகளில் அடுத்த சில வாரங்களில் வெளியாகலாம். இதே பட்ஜெட்டில் இந்திய விலை நிர்ணயம் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Moto E14 With 6GB RAM, 5000mAh Battery Launched Under Rs 8000 in Europe Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X