ஆர்டர் அதிரும்.. வெறும் ரூ.6749 பட்ஜெட்ல 8GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த மோட்டோரோலா பிரியர்களையும் பிளிப்கார்ட்டில் குவிய வைக்கும் விதமாக 8ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி கொண்ட மோட்டோ இ13 (Moto E13) போனின் புதிய கலர் வேரியண்ட் வெறும் ரூ.6749க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
மோட்டோ இ13 அம்சங்கள் (Moto E13 Specification): இந்த மோட்டோ போன் 6.5 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go Edition) ஓஎஸ் கொண்ட ஆக்டா-கோர் யூனிசோக் டி606 (Octa-Core Unisoc T606) சிப்செட் வருகிறது.

அதோடு மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 2ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதோடு 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது.
ஆகவே, இந்த போனில் டூயல் நானோ சிம் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டோ போனில் எல்இடி பிஷாஸ் லைட்டுடன் கூடிய சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கேமராவில் போர்ட்ராய்டு (Portrait), பனோரமா (Panorama), ப்ரோ மோட் (Pro Mode), ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture), எச்டிஆர் (HDR) மற்றும் டைம் லேப்ஸ் (Timelapse) போன்ற பீச்சர்கள் (Features) வருகின்றன. இந்த மோட்டோ போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
3.5 எம்எம் இயர்போன் ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சிங்கிள் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Single Bottom-ported Speaker), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது. IP52 தர ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Splash Resistant) கொண்டிருக்கிறது. இதுவொரு 4ஜி மாடல் என்பதால், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.
இந்த போன் பேட்டரியோடு சேர்த்தே 179.5 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. இந்த போன் காஸ்மிக் பிளாக் (Cosmic Black), அரோரா கிரீன் (Aurora Green) மற்றும் கிரீமி ஒயிட் (Creamy White) ஆகிய மூன்று கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,999ஆக நிர்யணம் செய்யப்பட்டது. கம்மியான விலையில், நல்ல அம்சங்களை கொண்டிருந்ததால், விற்பனையில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த விற்பனையை மீண்டும் சூடுபிடிக்க வைக்கும்விதமாக மோட்டரோலா நிறுவனம், இந்த போனின் புதிய கலர் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்கை ப்ளூ (Sky Blue) கலர் மாடல், அட்டகாசமான தள்ளுபடியுடன் வந்துள்ளது. அதாவது, ரூ.8,999 விலை கொண்ட இந்த போன் வெறும் ரூ.6749க்கு விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த போனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் வாங்கிக் கொள்ளலாம். விரைவில் விற்பனை தொடங்க இருக்கிறது. இதுவொரு லிமிடெட் பீரியட் ஆஃபராகும். அதேபோல பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் மோட்டோரோலா போன்களுக்கு அறிவிக்கப்படும் ஆஃபர் விவரங்கள் இன்று (செப்டம்பர் 28) 7 மணிக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








