ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தான் ஐரோப்பாவில் தனது மோட்டோ இ13 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போனை இந்தியாவிலும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும்.
அதாவது மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் ஆனது பிப்ரவரி முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

பெரிய டிஸ்பிளே
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் மாடல்.
சுமாரான சிப்செட்
நோக்கியா போன்களில் அதிகமாக இடம்பெறும் Unisoc சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன். அதாவது இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் Unisoc டி606 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் வசதியின் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவும் இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் மாடல். ஆனால் இந்த சிப்செட் வசதிக்குப் பதிலாக ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இடம்பெற்றிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

ஸ்டோரேஜ் வசதி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன்.
கேமரா எப்படி?
மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். ஆனால் இந்த போன் 8எம்பி அல்லது 13எம்பி செல்பி கேமராவுடன் வெளிவந்தால் இன்னும் அருமையாக இருக்கும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன்.

பேட்டரி வசதி
5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரைவக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன். எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் மாடல்.
பிரயோஜனம் இல்லை
மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்கள் ஓரளவு பரவாயில்லை, ஆனால் இந்த போனில் 5ஜி வசதி கிடையாது. ஆதாவது இந்த போன் 4ஜி வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பல செல்போன் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 5ஜி போனை அறிமுகம் செய்ய தொடங்கவிட்டன. ஆனால் மோட்டோரோலா நிறுவனம் இந்த மோட்டோ இ13 போனை பட்ஜெட் விலையில் இறக்கிவிடுவதால் பிரயோஜனம் இல்லை என்றே கூறலாம்.

குறிப்பாக இந்த போன் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த மோட்டோ இ13 போன் ரூ.10.000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications