கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய Motorola போன்: அறிமுக தேதி இதுதான்.!
மோட்டோரோலா நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் கடந்த வாரம் ஐரோப்பாவில் மோட்டோ இ13 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
அறிமுக தேதி?
தற்போது இந்த புதிய மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பிரபல டிப்ஸ்டர் முகுல் ஷர்மான வெளியிட்ட தகவல்களில், இந்த புதிய மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 8-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த போன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் அம்சங்கள்
மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். எல்சிடி டிஸ்பிளே என்பதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் Unisoc டி606 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் வசதியின் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவும் இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சிப்செட் வசதிக்குப் பதிலாக மீடியாடெக் அல்லது ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இடம்பெற்றிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 (Go Edition) இயங்குதள வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டு வெளிவரும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போன்.
இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரைவக் கொண்டுள்ளது . எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன்.
இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த புதிய மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் 5ஜி போன்களுக்கு தான் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. எனவே இந்த மோட்டோ இ13 போன் 5ஜி ஆதரவுடன் வெளிவந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் விலை?
மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த மோட்டோ இ13 போன் ரூ.10.000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான 5G ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications