Home
Mobile

ரூ.6,499 விலையில் புதிய போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் மோட்டோரோலா: என்னென்ன அம்சங்கள்.!

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ இ13 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் ஆனது வரும் பிப்ரவரி 18-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் கம்மி விலையில் வெளிவரும்.

அதாவது 2ஜிபி ரேம் கொண்ட மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் ரூ.6,499-விலையிலும், இதன் 4ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் ரூ.6,999-விலையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று techlusive தளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் கம்மி விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரூ.6,499 விலையில் புதிய போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் மோட்டோரோலா!

சூப்பர் டிஸ்பிளே

குறிப்பாக இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் ஏற்கனவே ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது மோட்டோ இ13 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம். மேலும் மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் Unisoc டி606 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் வசதியின் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவும் இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரூ.6,499 விலையில் புதிய போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் மோட்டோரோலா!

மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 (Go Edition) இயங்குதள வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டு வெளிவரும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா எப்படி?

மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். ஆனால் இந்த 5எம்பி செல்பி கேமராவுக்கு பதிலாக 8எம்பி அல்லது 12எம்பி கேமரா இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த போன் எல்இடி பிளாஷ் மற்றும்
பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது . எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன்.

ரூ.6,499 விலையில் புதிய போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் மோட்டோரோலா!

4ஜி ஸ்மார்ட்போன்

மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது மோட்டோ இ13 மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto E13 smartphone will be launched in India at a price of Rs 6,499: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X