Home
Mobile

ரூ.8,999 போதும்.. 8ஜிபி ரேம்.. 6.5-இன்ச் டிஸ்பிளே.. அறிமுகமானது புது Motorola போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மோட்டோ இ13 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த போன் முதலில் 2ஜிபி/4ஜிபி ரேம் ஆதரவுடன் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் 8ஜிபி ரேம் கொண்ட மோட்டோ இ13 மாடல் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது 2ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் ரூ.6,499-விலையிலும், இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.6,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ இ13 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம்.. 6.5-இன்ச் டிஸ்பிளே.. அறிமுகமானது புது Motorola போன்.!

குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ இ13 மாடலை ரூ.8,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த புதிய வேரியண்ட்-ஐ வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா.காம் தளங்களில் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.

மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் யுனிசாக் டி606 (Octa-Core Unisoc T606) சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

2ஜிபி/4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 13 ( கோ எடிஷன்) Android 13 (Go edition) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.

மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது . எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், டால்பி ஆடியோ, தரமான ஸ்பீக்கர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை 179.5 கிராம் ஆகும்.

8ஜிபி ரேம்.. 6.5-இன்ச் டிஸ்பிளே.. அறிமுகமானது புது Motorola போன்.!

டூயல் 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது மோட்டோ இ13 மாடல். குறிப்பாக கம்மி விலையில் அசத்தலான 4ஜி போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த இந்த மோட்டோ ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது.

அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் 50எம்பி கேமரா, 5ஜி ஆதரவு, மீடியாடெக் டைமன்சிட்டி 1050, 5000 எம்ஏஎச் பேட்டரி, 68 வாட்ஸ் பாஸ்ட் சர்ர்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto E13 8GB 128GB Price, Specs, Sale Date: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X