குறைந்த விலையில் வெளியானது மோட்டோ இ...!

Posted By:

இன்றைக்கு இந்திய மொபைல் சந்தையை மெல்ல மெல்ல தன் வசப்படுத்தி வருகிறது மோட்டோரோலா நிறுவனம்.

சிறிது நாட்களுக்கு முன்னர் மோட்டோ ஜி(Moto G) மொபைலை வெளியிட்டு விற்பனையை அள்ளி குவித்தனர் மோட்டோரோலா நிறுவனம்.

அதைத் தொடர்ந்து தற்போது மோட்டோ இ(Moto E) என்கிற மொபைலை ரூ.6,999 க்கு வெளியிட்டு மொத்த மொபைல் உலகின் பார்வையையும் தன்பக்கம் திருப்பியுள்ளது மோட்டோரோலா.

இதோ அந்த மொபைலின் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாமாங்க 4.3 இன்ச் டிஸ்பிளே உடன் கிடைக்கும் இந்த மொபைலில் கொரில்லா கிளாஸூடன் நமக்கு கிடைக்கின்றதுங்க.

குறைந்த விலையில் வெளியானது மோட்டோ இ...!

4GB க்கு இன்பில்ட் மெமரியுடன் கிடைக்கும் இந்த மொபைலில் 32GBக்கு மெமரி கார்டு போடும் ஆப்ஷனும் இருக்குங்க.

அடுத்து இதன் கேமரா திறனை பொருத்தவரை 5MP கேமரா இதில் உள்ளது 1GB க்கு ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ் உடன் நமக்கு இது ப்ளிப்கார்டில்(Flipkart) கிடைக்குதுங்க.

இந்த மொபைல் மோட்டோ ஜி யை போலவே தாங்க ப்ளிப்கார்டில் மட்டும் தாங்க கிடைக்கும் வேறு எங்கும் இந்த மொபைல் நமக்கு கிடைக்காதுங்க....எது எப்படியோ ப்ளிப்கார்ட் காட்டில் நல்ல மழை தான்.

இதோ அந்த மொபைலின் வீடியோ...

<center><iframe width="100%" height="357" src="//www.youtube.com/embed/v5Asedlj2cw" frameborder="0" allowfullscreen></iframe></center>

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்