கண்ணா 3வது லட்டு சாப்பிடணுமா.. ஒரே நேரத்தில் 3 Motorola 5ஜி போன்கள் மீது முரட்டு டிஸ்கவுண்ட்.. Flipkart இல்!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் மோட்டோரோலா (Motorola) ஸ்மார்ட்போன்கள் மீதான பிரத்யேக சலுகைகளை வழங்கும் ஒரு சிறப்பு விற்பனை நடக்கிறது. மோட்டோ டேஸ் (Moto Days) என்கிற தலைப்பின் கீழ் அணுக கிடைக்கும் இந்த சிறப்பு விற்பனையின் கீழ் 2 மோட்டோ ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
அதென்ன மாடல்கள்?
1. மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G): ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது.
2. மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G): ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.
3. மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G): ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷபின் மற்றும் 1600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67 இன்ச் எப்எச்டி பிளஸ் கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான மை யுஎக்ஸ் (My UX) கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 வருட சாஃப்ட்வேர் அப்டேட்களும், 3 வருட செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 6s Gen 3) சிப்செட் உடனாக அட்ரெனோ 619 ஜிபியு உடன் கிராபிக்ஸ் கொண்டு இயங்குகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஓஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 8எம்பி மேக்ரோ-டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இது 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மோஸ் மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கும் உள்ளது.
மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.5 இன்ச் எச்டிபிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே
- 1600 x 720 பிக்சல்ஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட்
- 50எம்பி + 2எம்பி மேக்ரோ டூயல் ரியர் செட்டப்
- 16எம்பி செல்பீ கேமரா
- ஐபி52 ஃஸ்ளாஷ் ரெசிஸ்டன்ட்
- டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
- 5000mAh பேட்டரி
மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 1000 நிட்ஸ் பிரைட்னஸ்
- எச்டிஆர் 10
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- யுனிசாக் டி760 (Unisoc T760) சிப்செட்
- 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் டூயல் ரியர் கேமரா
- 16 எம்பி செல்பீ கேமரா
- ஐபி52 ரேட்டிங் டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட்
- டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்
- 20W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5000mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








