ரூ.5,999/-க்கு இந்தியாவில் 'ஸ்பெஷல்' மோட்டோ சி மாறுபாடு அறிமுகம்.!

லெனோவாவின் துணை பிராண்டான மோட்டோரோலா இந்தியாவில் அதன் மோட்டோ சி கருவியை ரூ.5,999/-க்கு அறிமுகம் செய்துள்ளது.

|

மோட்டோ சி மற்றும் மோட்டோ சி பிளஸ் கருவிகள் கடந்த மே 16 அன்று லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா பசிபிக் ஆகிய சந்தைகளுக்காக அறிவிக்கப்பட்டன. இன்று, லெனோவாவின் துணை பிராண்டான மோட்டோரோலா இந்தியாவில் அதன் மோட்டோ சி கருவியை ரூ.5,999/-க்கு அறிமுகம் செய்துள்ளது.

ரூ.5,999/-க்கு இந்தியாவில் 'ஸ்பெஷல்' மோட்டோ சி மாறுபாடு அறிமுகம்.!

எனினும், நிறுவனம் நாட்டில் ஒரு புதிய மாறுபாட்டை தான் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவின் 100 நகரங்களில் ஆப்லைன் ஸ்டோர்களால் கிடைக்கிறது. அறிவிக்கப்பட்டுள்ள மோட்டோ சி இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்.

ரூ.6,200/- என்ற விலை நிர்ண்யம் கொண்ட கருவி 3ஜி இணைப்புடன் வருகிறது மற்ற கருவி 4ஜி விருப்பத்துடன் வருகிறது அது சுமார் 6,900/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ளது. எனினும், இந்தியாவில் மோட்டோரோலா 1 ஜிபி ரேம், 16 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு, 4ஜி வோல்ட் ஆதரவு மற்றும் இரட்டை சிம் ஸ்லாட்களுடன் முழுமையான புதிய மாறுபாட்டைத்தான் அறிவிக்கிறது.

ரூ.5,999/-க்கு இந்தியாவில் 'ஸ்பெஷல்' மோட்டோ சி மாறுபாடு அறிமுகம்.!

விவரக்குறிப்புகள் அடிப்படையில், மோட்டோ சி பிளே புதிய மாறுபாடானது 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 அங்குல எப் ]டபுள்யூ ]விஜிஏ டிஸ்பிளே உடன் ஆண்ட்ராய்டு என் இயங்குதளத்தில் இயங்குகிறது. மேலும் இது 1.1ஜிகாஹெர்ட்ஸ் மீடியா டெக் எம்டி6737எம் க்வாட்கோர் கோர்டெக்ஸ்-ஏஏ53 எஸ்ஓசி உடன் இணைந்த 1ஜிபிபி ரேம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. மோட்டோ சி மாடல் ஆனது மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது.

கேமரா துறையை பொறுத்தம்மட்டில், மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ஒரு 5 மெகாபிக்சல் பின்புற சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. 1.4-மைக்ரான் பிக்சல்கள், 74-டிகிரி பீல்ட் ஆப் வியூ, நிலையான போகஸ், ஒரு எல்இடி ப்ளாஷ் மற்றும் 720பி வீடியோ பதிவு போன்ற முதன்மை விருப்பங்களையும் கொண்டுள்ளது.

ரூ.5,999/-க்கு இந்தியாவில் 'ஸ்பெஷல்' மோட்டோ சி மாறுபாடு அறிமுகம்.!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு நீக்க முடியாத ஒரு 2350எம்ஏஎச் பேட்டரி கொண்டு 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்புகளை ஆதரிக்கிறது. இந்தியாவில் மோட்டோ சி இரண்டு வண்ண மாறுபாடுகளில்- மெட்டல் செர்ரி மற்றும் பைன் கோல்ட் - ரூ.5,999/-க்கு ஏற்கனவே ஆப்லைன் கடைகளில் கிடைக்கிறது. இந்த சாதனம் இன்னும் சில நாட்களில் ஆன்லைன் சேனல்களிளிலும் கிடைக்கும்.

மறுபக்கம் மோட்டோ சி ப்ளஸ் வடிவமைப்பில் மோட்டோ சி போன்றே இருக்கிறது. 5 இன்ச் (720x1280பிக்சல்கள்) டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளம் கொண்ட இக்கருவி 1.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியா டெக் எம்டி6737 க்வாட்கோர் கார்டெக்ஸ்-ஏ53 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்க நினைவகத்துடன் வருகிறது. கேமராத் துறையை பொறுத்தம்மட்டில் எப் / 2.2 துளை, ஆட்டோபோக்கஸ், ஒரு எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் ரியர் கேமரா கொண்டுள்ளது. மோட்டோ சி உடன் ஒப்பிடும்போது மிகவும் மேம்பட்ட பேட்டரித்திறனாக 4000எம்ஏஎச் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto C with 4G VoLTE support launched in India at Rs 5,999, available on offline stores. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X