Home
Mobile

4000எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ சி ப்ளஸ் : இன்று முதல் விற்பனைக்கு.!

மோட்டோ சி கருவியில் காணப்படும் 2350எம்ஏஎச்பேட்டரியைவிட மோட்டோ சி பிளஸ் மிகப்பெரிய 4000எம்ஏஎச்அகற்றக்கூடிய பேட்டரியை கொண்டுள்ளது.

By Muthuraj

லெனோவா இந்தியா இன்று அதன் மோட்டோ சி பிளஸ் பட்ஜெட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை இந்தியாவில் புது தில்லியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் தொடங்குகிறது. ஆன்லைன் இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட்டில் மோட்டோ சி பிளஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் துவக்கம் (இன்று) திங்கட்கிழமை மதியம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிமுக நிகழ்விற்கான உத்தியோகபூர்வ அழைப்பை நிறுவனம் அனுப்பி வைத்துள்ள நிலைப்பாட்டில் மோட்டோரோலா மோட்டோ சி ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது எந்த அளவு சிறப்பான ஒரு கருவியாக இருக்கிறது.? இதற்கு முன்பு வெளியான நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ சி ஸ்மார்ட்போனுக்கும் இக்கருவிக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன என்பதை பற்றிய விவரங்கள் இதோ.!

5 இன்ச் டிஸ்ப்ளே

5 இன்ச் டிஸ்ப்ளே

மோட்டோ சி பிளஸ் ஆனது மோட்டோ சி போன்ற 5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளாது. ஆனால் எப்டபுள்யூவிஜிஏ-க்கு (FWVGA) பதிலாக எச்டி (720 x 1280 பிக்ஸல்) தீர்மானம் கொண்டுள்ளது.

1ஜிபி அல்லது 2ஜிபி ரேம்

1ஜிபி அல்லது 2ஜிபி ரேம்

இது 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எம்டி6737 64-பிட் செயலி உடனான 1ஜிபி அல்லது 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு கொண்ட மாலி- டி720 ஜிபியூ மூலம் இயங்குகிறது. மேலும் இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழியாக 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது.

8எம்பி பின்புற கேமரா

8எம்பி பின்புற கேமரா

மோட்டோ சி ப்ளஸ் சாதனத்தின் கேமரா துறையை பொறுத்தமட்டில் ஒரு 8எம்பி பின்புற கேமரா (எப் / 2.2 துளை), 2 எம்பி முன்பக்க கேமரா (எப் / 2.8 துளை) கொண்டுள்ளது.

வண்ண விருப்பங்கள்

வண்ண விருப்பங்கள்

மோட்டோ சி போன்றே இக்கருவியும் மெட்டாலிக் செர்ரி, பெர்ல் ஒயிட், ஃபைன் கோல்ட் மற்றும் ஸ்டாரி பிளாக் போன்ற நான்கு வண்ண விருப்பங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ சி பிளஸ் மோட்டோ சி கருவியில் காணப்படும் 2350எம்ஏஎச்பேட்டரியைவிட மிகப்பெரிய 4000எம்ஏஎச்அகற்றக்கூடிய பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் வேகமான சார்ஜ் நிகழ்வதற்கான 10வாட் பாஸ்ட் சார்ஜரையும் கொண்டிருக்கும்.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

மோட்டோரோலா இந்தியாவில் மோட்டோ சி பிளஸ் கருவியின் இரட்டை சிம் 4ஜி வோல்ட் வகைகளை அறிமுகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கைபேசி ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்(அவுட் ஆஃப் பாக்ஸ்) கொண்டு இயங்குகிறது.

ரூ.6,999/-

ரூ.6,999/-

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் மோட்டோ சி ப்ளஸ் ஆனது ரூ.6,999/- என்ற சூப்பர் பட்ஜெட் புள்ளியை பெற்றுள்ளது. இக்கருவியின் முதல் விற்பனையை நாளை 12 மணி முதல் (செவ்வாய்) ப்ளிப்கார்ட் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோட்டோ சி

மோட்டோ சி

மோட்டோ சி ஆனது ஏற்கனவே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.5,999 விலை நிர்ணயத்தில் மோட்டோரோலா அதை ஆன்லைனில் விற்பனை செய்கிறது என்பதும் மோட்டோ சி மற்றும் மோட்டோ சி பிளஸ் ஆகியவை லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா பசிபிக் ஆகிய பிரதேசங்களில் கடந்த மாதம் தொடங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோட்டோ இசெட்2 ப்ளே

மோட்டோ இசெட்2 ப்ளே

மறுபக்கம் ஜூன் 27-ஆம் தேதி மோட்டோரோலாவின் க்ளோபல் நிகழ்வு ஒன்றிற்கானஅழைப்பிதழ்கள் ஆன்லைனில் சிக்கியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் புதிய மோட்டோ இசெட்2 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகுமென்று எதிர்பார்க்கலாம். மோட்டோரோலா சமீபத்தில் இந்தியாவில் மோட்டோ இசெட்2 ப்ளே சாதனத்தை ரூ.27,999 அறிமுகப்படுத்தியது மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புலத்துடன் இணைக்கப்படக்கூடிய மோட்ஸின் ஆதரவைக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Moto C Plus With 4000mAh Battery to Launch in India Today. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X