ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே வாய் பிளக்குது.. 5 நாட்கள் பேட்டரி.. 32ஜிபி மெமரி.. புது மோட்டோ பீச்சர் போன்..
பயண நேரங்களில் ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும், தொடர்ந்து பயன்படுத்தும்போது பேட்டரி வேகமாகக் குறைந்துவிடும். குறிப்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பது, ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பது போன்ற செயல்பாடுகள் பேட்டரி சார்ஜை சில மணி நேரங்களிலேயே காலி செய்துவிடக்கூடும். இதனால் நீண்ட நேரப் பயணங்களில் அவசரத் தேவைக்காக மாற்று போன் ஒன்றை வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும்.
அந்த வகையில், பீச்சர் போன்கள் சிறந்த தேர்வாக அமைகின்றன. ஸ்மார்ட்போன்களைப் போல அதிக பேட்டரி பயன்பாடு இல்லாததால், ஒருமுறை சார்ஜ் செய்தால் பல நாட்கள் வரை தொடர்ந்து பயன்படுத்த முடியும். குறிப்பாக அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பயணிகளுக்கு இத்தகைய போன்கள் உதவியாக இருக்கும்.

இந்நிலையில் பீச்சர் போன்கள் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவில் மோட்டோ ஏ300 2026 பீச்சர் (Moto A300 2026) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த புதிய மோட்டோ போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ ஏ300 2026 அம்சங்கள் (Moto A300 2026 Specifications): புதிய மோட்டோ ஏ300 2026 மாடல் ஆனது 2.0 இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகியுள்ளது. எளிதாக கையாளவும், எடுத்துச் செல்லவும் வசதியாக இருக்கும் வகையில் இதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான டிஸ்ப்ளே மற்றும் எளிமையான வடிவமைப்பு காரணமாக அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற சாதனமாக இது இருக்கிறது.
குறிப்பாக இந்த போனில் 1000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் பேட்டரி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 3 முதல் 5 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் மோட்டோ ஏ300 2026 மாடலில் டூயல் சிம் (SIM) வசதியும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரே சாதனத்தில் இரண்டு எண்களை பயன்படுத்துவதுடன், தேவைக்கேற்ப வெவ்வேறு மொபைல் நெட்வொர்க்குகளையும் பயன்படுத்த முடியும்.
இந்த புதிய மோட்டோ போனில் 32ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த முடியும். இதன் மூலம் பயனர்கள் தங்களது தேவைக்கேற்ப கூடுதல் சேமிப்பிடத்தைப் பெற முடியும். புகைப்படங்கள், பாடல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட கோப்புகளைச் சேமித்து வைக்க இந்த ஸ்டோரேஜ் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டோ ஏ300 2026 மாடலில் வழக்கமான பீச்சர் போன்களில் காணப்படும் பல பயனுள்ள வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஆட்டோ கால் ரெக்கார்டிங், வயர்லெஸ் FM ரேடியோ, டார்ச் மற்றும் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. எளிமையான பயன்பாட்டுடன் அன்றாட தேவைகளுக்கு ஏற்ற வகையில் இந்த அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதில் உள்ள வயர்லெஸ் FM ரேடியோ மூலம் மொபைல் டேட்டா அல்லது இணைய இணைப்பு இல்லாமலேயே செய்திகள் மற்றும் பாடல்களைக் கேட்க முடியும். ப்ளூடூத் மற்றும் டார்ச் போன்ற வசதிகளும் தேவையான நேரங்களில் கூடுதல் பயன்பாட்டை வழங்குகின்றன.
குறிப்பாக மோட்டோ ஏ300 2026 மாடலின் விலை ரூ.1370-ஆக உள்ளது. பிளாக் மற்றும் பர்பிள் கலர்களில் இந்த போனை வாங்க முடியும். அமேசான், பிளிப்கார்ட், ஸ்விக்கி, ஜெப்டோ, பிளிங்கிட் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications
