Home
Mobile

பட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் மோட்டோ 1எஸ் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

லெனோவா நிறுவனத்திற்கு சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் தற்சமயம் மோட்டோ 1எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது, அதன்பின்பு டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் பல்வேறு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் மோட்டோ 1எஸ் அறிமுகம்.!

மோட்டோ 1எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை விக்டோரியா ப்ளூ மற்றும் சார்லோட் பவுடர் நிறங்களில் கிடைக்கும் என்று மோட்டோரோலா நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மோட்டோ 1எஸ்  :

மோட்டோ 1எஸ் :

நோக்கியா 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச்முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது மோட்டோ 1எஸ் ஸ்மார்ட்போன்.

 ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

மோட்டோ 1எஸ் ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கேமரா பகுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

 கேமரா:

கேமரா:

இந்த மோட்டோ 1எஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி +5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:

விலை:

மோட்டோ 1எஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.15,900-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Best Mobiles in India

English summary
Moto 1s launched with 4 GB RAM two rear cameras; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X