OnePlus-இன் இந்த பவர்ஃபுல் ஸ்மார்ட்போன் மீது 3-வது முறையாக விலைக்குறைப்பு!
நீங்கள் OnePlus நிறுவனத்தின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணிப்பவராக இருந்தால்..
அதாவது லேட்டஸ்ட் ஆக என்ன மாடல் அறிமுகமானது? அடுத்தது என்ன ஸ்மார்ட்போன் வரவுள்ளது? பழைய மாடல்களின் மீது ஏதேனும் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதா? போன்றவைகளை தெரிந்துகொள்ளும் வழக்கம் உங்களிடம் இருந்தால்..

உங்களுக்கு சொல்லவே வேண்டாம்!
சமீபத்தில் தான், இந்நிறுவனத்தின் OnePlus 10T 5G அறிமுகமானது, அதன் விளைவாக OnePlus 10 Pro 5G மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது என்பதை உங்களுக்கு சொல்லவே வேண்டாம்!
அதன் தொடர்ச்சியாக, OnePlus 9 Pro ஸ்மார்ட்போனின் மீதும் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது! இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், இது ஒன்பிளஸ் 9 ப்ரோ மீது அறிவிக்கப்பட்டுள்ள மூன்றாவது ப்ரைஸ் கட் ஆகும்.

"அடிமாட்டு விலைக்கு" வாங்க கிடைக்கும் - OnePlus 9 Pro!
"அடிமாட்டு விலை" என்றதுமே ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல் ஆனது ரூ.10,000 அல்லது ரூ.15,000 க்கு வாங்க கிடைக்கிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.
விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்ற ஒரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போனின் மீது 3-வது விலைக்குறைப்பு அறிவிக்கப்படுவது சற்றே ஆச்சரியமாக இருக்கிறது என்பதே எங்களின் கூற்று!

OnePlus 9 Pro-வின் பழைய விலை VS புதிய விலை!
நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் 9 ப்ரோ ஆனது கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிறுவனத்தின் "மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்" ஆகும்.
அப்படிப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனின் மீது தான் மூன்றாவது முறையாக விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் விலைக்குறைப்பு - இந்த ஆண்டு ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது; பின்னர் OnePlus 9 Pro மீது ரூ.5,800 என்கிற இரண்டாவது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது.

தற்போது மூன்றாவது முறையாக?
இப்போது மூன்றாவது முறையாக OnePlus 9 Pro ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.4,200 குறைக்கப்பட்டுள்ளது.
சுவாரசியமாக இந்த விலை வீழ்ச்சி, ஒன்பிளஸ் 9 ப்ரோவின் இரண்டு ஸ்டோரேஜ் (8GB + 128GB மற்றும் 12GB + 256GB.) ஆப்ஷன்களின் மீதும் அணுக கிடைக்கிறது.
இரண்டாவது விலைக் குறைப்புக்குப் பிறகு 8ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது ரூ.54,199 க்கும், 12ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது ரூ.59,199 க்கும் விற்கப்பட்டது.

இப்போது.. இன்னும் கம்மியான விலைக்கு வாங்க கிடைக்கிறது!
மூன்றாவது மற்றும் லேட்டஸ்ட் விலைக்குறைப்புக்கு பிறகு, ஒன்பிளஸ் 9 ப்ரோவின் 8ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது ரூ.49,999 க்கும் மற்றும் 12ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது ரூ.54,999 க்கும் வாங்க கிடைக்கிறது!
இது மார்னிங் மிஸ்ட், பைன் க்ரீன் மற்றும் ஸ்டெல்லர் பிளாக் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது!

ரூ.49,999-க்கு OnePlus 9 Pro வொர்த்-ஆ? நம்பி வாங்கலாமா?
இரண்டே வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் - தாராளமாக வாங்கலாம்! ஏனெனில் 10-க்கு 9 மார்க் வாங்கும் அளவிற்கு 9 ப்ரோ மாடல், இன்னமும் வொர்த் ஆன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாகவே திகழ்கிறது!
இருந்தாலும் கூட, ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் இருப்பது போல 9 ப்ரோ மாடலிலும் ஒரு சில குறைகள் உள்ளன. அந்த குறைகள் உங்களுக்கு பெரிதாக தெரியும் பட்சத்தில் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்காமல் தவிர்க்கலாம்!

அதென்ன குறைகள்?
- இதன் கேமரா ஆப், அவ்வப்போது அதிகமாக வெப்பமடைகிறது.
- மேலும் இதன் செல்பீ கேமரா இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.

நிறைகளை பற்றி பேசும் போது..
- ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பில்ட்-குவாலிட்டி மிகவும் தரமாக இருக்கிறது
- விலைக்கு ஏற்ற நல்ல 50W வயர்லெஸ் சார்ஜிங்
- ஹீட்டிங் ஆகிறதே தவிர, திறன்களில் ஒரு குறையும் சொல்ல முடியாத ரியர் கேமராக்கள்
- ஒட்டுமொத்த பெர்ஃபார்மென்ஸ் நன்றாக இருக்கிறது
- இதன் டிஸ்பிளே மிகவும் தெளிவானதாக இருக்கிறது!


Click it and Unblock the Notifications