Home
Mobile

தொட்டா பவரு டா.. சொன்னா கேளுடா.. மார்ச் 28 இல் அறிமுகமாகும் பவர்ஃபுல் ஆன Redmi போன்!

இதுவரையிலாக ரெட்மி (Redmi) நிறுவனம் அதன் நோட் சீரிஸின் (Note Series) கீழ், இப்படியொரு பவர்ஃபுல்லான ஸ்மார்ட்போனை (Powerful Smartphone) அறிமுகம் செய்ததே இல்லை என்று கூறும்படியாக வருகிற மார்ச் 28 ஆம் தேதியன்று ஒரு மாஸ் ஆன ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது!

நாம் இங்கே பேசுவது ரெட்மி நோட் 12 டர்போ (Redmi Note 12 Turbo) ஸ்மார்ட்போனை பற்றித்தான். ரெட்மி நோட் 12 சீரிஸின் கீழ் ஏற்கனவே 4 மாடல்கள் அறிமுகமாகி விட்டாலும் என்றாலும் கூட, இது தான் இந்த சீரீஸின் கீழ் வெளியான மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக இருக்கும். ஏனென்றால் இது பேக் செய்யும் அம்சங்கள் அப்படி!

மார்ச் 28 இல் அறிமுகமாகும் பவர்ஃபுல் ஆன Redmi போன்!

இந்த போனில் அப்படி என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மிகவும் நெருக்கமாக உள்ளதால், இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன. சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனில் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டது.

கூடவே இதில் 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் இருக்குமென்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனில் எச்டிஆர்10+ மற்றும் 1920ஹெர்ட்ஸ் பல்ஸ் விட்த் மாடுலேஷன் (Pulse width modulation) டிம்மிங் உடனான 6.67-இன்ச் 12-பிட் ஓஎல்இடி டிஸ்ப்ளே இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான போஸ்டரில் ரெட்மி நோட் 12 டர்போவானது பிளாட் டிஸ்ப்ளே மற்றும் செல்பீ கேமராவிற்கான ஹோல்-பஞ்ச் கட்அவுட் டிசைனை கொண்டிருப்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் குவால்காமின் லேட்டஸ்ட் மற்றும் பவர்ஃபுல் மொபைல் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 ப்ராசஸரை பேக் செய்யும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி நோட் 12 டர்போவில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா இருக்கும். முன்பக்கத்தில் 12எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம்.

உறுதிசெய்யப்பட்ட மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியை கொண்டிருக்கும்; ரெட்மியின் கூற்றுப்படி இந்த பேட்டரி "1.33 நாட்கள்" வரை நீடிக்கும். கடைசியாக, அளவீட்டில் இது 7.9 மிமீ தடிமனையும், எடையில் 181 கிராமும் இருக்கும். மீதமுள்ள அம்சங்கள் வருகிற மார்ச் 28 ஆம் தேதி சீனாவில் நடக்கும் அறிமுகத்தின் போது வெளிப்படுத்தப்படும்.

கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ரெட்மி நோட் 12 சீரீஸின் கீழ் வெளியான 3 "முதன்மையான மாடல்களான" ரெட்மி நோட் 12 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல்கள் ஏற்கனவே இந்தியாவில் வாங்க கிடைக்கின்றன.

ஆக எப்படியும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தைக்குள் நுழைந்து விடும். ஒருவேளை இது ரெட்மி பிராண்டிங்கின் கீழ் வெளியாகவில்லை என்றாலும் கூட இது போக்கோ (POCO) பிராண்டிங்கின் கீழ் ஒரு ரீபிராண்டட் வெர்ஷனாக (Rebranded Version) இந்தியாவிற்குள் வந்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!

More from GizBot

Best Mobiles in India

English summary
Most Powerful Phone in Redmi Note 12 Lineup Check Redmi Note 12 Turbo Specs Launch Date March 28
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X