Home
Mobile

மார்க்கெட் இனி TECNO கையில.. இவ்ளோ கம்மி பட்ஜெட்ல.. 120Hz டிஸ்பிளே, 24GB ரேம், 108MP கேம், 6000mAh பேட்டரி-ஆ!

120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, 12ஜிபி விர்ச்சுவல் ரேம் உடன் சேர்த்து மொத்தம் 24ஜிபி ரேம், 108எம்பி மெயின் கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி உட்பட பல முக்கிய அம்சங்களுடன் அறிமுகமான.. டெக்னோவின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று (ஏப்.4) முதல் தொடங்கியது!

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி (Tecno POVA 6 Pro 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். கடந்த மார்ச் 29 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வாங்க கிடைக்கிறது.

மார்க்கெட் இனி TECNO கையில.. POVA 6 Pro விற்பனை ஆரம்பம்!

என்ன விலை? 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999 க்கும், அதே சமயம் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Meteorite Gray மற்றும் Comet Green என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

என்னென்ன ஆஃபர் கிடைக்கும்? மேற்கண்ட 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மீதும் ரூ.2,000 உடனடி வங்கி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலையை ரூ.17,999 ஆகவும், 12ஜிபி ரேம் ஆப்ஷனின் விலையை ரூ.19,999 ஆக குறைக்கலாம். கூடுதலாக (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழியாக) இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.4,999 மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் கிடைக்கும்.

மார்க்கெட் இனி TECNO கையில.. POVA 6 Pro விற்பனை ஆரம்பம்!

என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே 2160ஹெர்ட்ஸ் PWM டிம்மிங் மற்றும் லோட் ப்ளூ லைட் உமிழ்வுகளுக்கான TUV ரைன்லேண்ட் சான்றிதழையும் கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை இது 6 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஐபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜில் இருந்து கூடுதலாக 12ஜிபி விர்ச்சுவல் ரேம்-ஐ கடன் வாங்கி, இந்த ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 24ஜிபி ஆக விரிவாக்கவும் முடியும்.

மார்க்கெட் இனி TECNO கையில.. POVA 6 Pro விற்பனை ஆரம்பம்!

கேமராக்களை பொறுத்தவரை, இதில் 108 மெகாபிக்சல் மெயின் சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் எல்இடி ஃபிளாஷ் உடனான 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும், டால்பி அட்மாஸ் ஸ்பேஷியல் சவுண்ட்டிற்கான ஆதரவுடன் வரும் முதல் டெக்னோ ஸ்மார்ட்போனான இதன் பேக் பேனலில் 210 எல்இடிகளுடன் டைனமிக் மினிஎல்இடி லைட்ஸ் செட்டப்பும் உள்ளது.

இதன் மினிஎல்இடி லைட்ஸ் செட்டப்பை, உங்களுக்கு வரும் வாய்ஸ் கால்கள், ஸ்மார்ட்போனின் பவர் ஸ்டேட்டஸ், நீங்கள் விளையாடும் கேம்ஸ் மற்றும் கேட்கும் ம்யூசிக் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஏற்றபடி கஸ்டமைஸ் செய்யலாம். ஹைஓஎஸ் 14 (HiOS 14) கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஹீட் மேனேஜ்மென்ட்டிற்காக மொத்தம் 2,7342 மிமீ கூலிங் ஏரியா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இ-ஸ்போர்ட்ஸ் ப்ரோ ஆபரேஷன் இன்ஜின் மற்றும் கேமிங்கிற்கான 4டி வைப்ரேஷன் சென்ஸும் அடங்கும்.

பேட்டரியை பொறுத்தவரை இது 70W சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. டெக்னோவின் கூற்றுப்படி , இது வெறும் 20 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 50% க்கும், 50 நிமிடங்களில் 100% க்கும் பேட்டரியை சார்ஜ் செய்யும், மேலும் சிங்கிள் சார்ஜில் 11 மணி நேர கேமிங், 14 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் 31 மணி நேர காலிங் டைமை வழங்கும்.

Best Mobiles in India

English summary
Most of the Indians Going to Buy This New 5G Phone Under Rs 20000 Check out Tecno POVA 6 Pro
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X