Camera Phone-னு வாங்குனா இதை வாங்கணும்; இல்லனா போட்டோவே எடுக்க கூடாது!
நீங்கள் கொஞ்சம் விவரம் தெரிந்த 'மொபைல் போட்டோகிராஃபராக' இருந்தால் உங்களுக்கு DXOMark வலைத்தளம் பற்றிய அறிமுகமே தேவைப்படாது.
ஒருவேளை தெரியாதென்றால்.. கவலை வேண்டாம்! DxOMark என்றால் என்னவென்று, சுருக்கமாக நாங்களே சொல்லி விடுகிறோம்!

DxOMark என்றால்?
டிஎக்ஸ்ஓமார்க் (DxOMark) என்பது ஸ்மார்ட்போன்கள், டிஎஸ்எல்ஆர்-கள், லென்ஸ்கள் மற்றும் கேமராக்கள் போன்றவைகளின் புகைப்படத் திறன்களை மற்றும் வீடியோ ரெக்கார்டிங் திறன்களை "அறிவியல் பூர்வமாக" மதிப்பிடும் ஒரு சுயாதீனமான பென்ச்மார்க் வலைத்தளம் ஆகும்!

இன்னும் விளக்கமாக சொல்லப்போனால்?
சந்தையில் அறிமுகமாகும் கேமரா போன்களை அக்குவேறு ஆணி வேறாக ஆய்வு செய்து, எது பெஸ்ட்? எது நம்பர் 1? அதற்கு என்ன காரணம்? என்பதை வெளிப்படுத்தும்; பட்டியலிடும் ஒரு வலைத்தளம் தான் - DxOMark!

அப்படியான DxOMark-இல் அடிக்கடி பட்டியலிடப்படும் ஒரு Vivo ஸ்மார்ட்போன்!
அது விவோ நிறுவனத்தின் எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களே ஆகும். எங்களுக்கு தெரிந்து எக்ஸ்50 மாடலில் இருந்து விவோ நிறுவனம் அதன் எக்ஸ் சீரீஸின் கீழ் "தாறுமாறான" கேமரா போன்களை அறிமுகம் செய்து வருகிறது.
குறிப்பாக ப்ரோ பிளஸ் (Pro+) மாடல்கள் ஆனது, வேற லெவல் கேமரா திறன்களுடன் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வரிசையில் ரெடியாகும் அடுத்த ஸ்மார்ட்போன் - விவோ எக்ஸ்80 ப்ரோ பிளஸ் (Vivo X80 Pro+) ஆகும்!

Vivo X80 Pro+ எப்போது அறிமுகமாகும்?
கிடைக்கப்பெற்ற தகவலின்படி, Vivo நிறுவனம் அதன் எக்ஸ்80 சீரிஸின் ப்ரீமியம் வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது Vivo X80 Series-இன் முந்தைய மாடல்கள்?
நினைவூட்டும் வண்ணம், இந்நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் Vivo X80 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
அதன் கீழ் Vivo X80 மற்றும் Vivo X80 Pro மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது மற்றும் கடைசி மாடலாக Vivo X80 Pro+ அறிமுகம் செய்யப்பட உள்ளது!

விவோ எக்ஸ்80 ப்ரோ பிளஸ் - என்ன விலைக்கு வரும்?
Vivo X80 Pro+ ஸ்மார்ட்போன் ஆனது கண்டிப்பாக Vivo X80 சீரீஸின் கீழ் வாங்க கிடைக்கும் பிரீமியம் அல்லது ஹை-எண்ட் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!
எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ.82,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம், இந்த விலை, சற்று முன்பின் இருக்கலாம்,.
நினைவூட்டும் வண்ணம், விவோ எக்ஸ்80 மற்றும் எக்ஸ்80 ப்ரோ மாடல்கள் ஆனது இந்தியாவில், முறையே ரூ.54,999 மற்றும் ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கிறது.

என்னது ரூ.82,000-ஆ? Vivo X80 Pro Plus-இல் அப்படி என்ன ஸ்பெஷல்?
ஒரு நல்ல கேமரா ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் எவருக்குமே, Vivo X80 Pro Plus-இல் உள்ள எல்லாமே ஸ்பெஷல் தான்.
ஏனெனில் இந்த விவோ ஸ்மார்ட்போனில் மிகவும் மேம்படுத்தப்பட்ட குவாட் ரியர் கேமரா சிஸ்டம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன சென்சார்களை எதிர்பார்க்கலாம்?
ஜிஎஸ்எம்அரேனா வழியாக கிடைத்த தகவலின்படி, இதில் 50MP (ஜிஎன்1) மெயின் சென்சார் + 48MP (சோனி ஐஎம்எக்ஸ்598) அல்ட்ரா-வைட் சென்சார் +12MP போர்ட்ரெய்ட் சென்சார் + 8MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் இடம்பெறலாம்.

கேமரா மட்டும் தான் ஸ்பெஷலா?
என்ன இப்படி கேட்டுடீங்க? ஒரு ஸ்மார்ட்போனில் கேமரா செயல்திறன் 'டாப்-நாட்ச்' ஆக உள்ளதென்றால், அதற்கு ஏற்ற ப்ராசஸரும் இருக்க வேண்டும் அல்லவா?
அப்படியாக, வரவிருக்கும் விவோ எக்ஸ்80 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 'டாப்-ஆஃப்-லைன்' ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் இடம்பெறும் என்பது போல் தெரிகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டிருக்கலாம்!


Click it and Unblock the Notifications