இது வேற ரகம்... 1-இன்ச் சென்சார்.. நான்கு 50MP கேமராக்களுடன் அறிமுகமான புதிய Xiaomi போன்.. என்ன விலை?
இந்த 2023 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சியோமி ஸ்மார்ட்போன் என்றால்.. குறிப்பாக மொபைல் போட்டோகிராஃபர்கள் (Mobile Photographers) மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் என்றால் - அது சியோமி 13 அல்ட்ராவாகத்தான் (Xiaomi 13 Ultra) இருக்கும்.
ஒருவழியாக சியோமி 13 அல்ட்ரா அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு, பலருடைய காத்திருப்புகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் அப்படி என்ன ஸ்பெஷல்? கேமராக்களை தவிர்த்து வேறு என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது? இதன் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

சியோமி 13 அல்ட்ராவின் கேமராக்களில் அப்படி என்ன ஸ்பெஷல்? இந்த ஸ்மார்ட்போன் ஹைஎண்ட் கஸ்டம் சம்மிக்ரான் லென்ஸ்களை (High-end Custom Summicron Lenses) கொண்ட லைகா (Leica) நிறுவனத்தால் ட்யூன் செய்யப்பட்ட குவாட் ரியர் கேமரா (Leica-tuned Quad rear camera) செட்டப் உடன் வருகிறது.
இதன் குவாட் கேமரா செட்டப்பில் 1-இன்ச் ஐஎம்எக்ஸ்989 சென்சார் உடனான 50-மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் மூன்று 50-மெகாபிக்சல் ஐஎம்எக்ஸ்858 சென்சார்கள் உள்ளன. அதாவது மொத்தம் நான்கு 50எம்பி கேமராக்கள் உள்ளன. இதன் கேமராக்கள் ஆறு மாறுபட்ட ஃபோகல் லென்ஸ்களை (Focal Lens) வழங்குகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. முக்கிய கேமரா செட்டிங்ஸ்களை பொறுத்தவரை, ஃபாஸ்ட் ஷாட் மோட்ஐ குறிப்பிடலாம். சியோமியின் கூற்றுப்படி, இது அட்டகாசமான ஸ்ட்ரீட் போட்டோக்களை எடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் 0.8 வினாடிகளுக்குள் புகைப்படத்தைக் கிளிக் செய்யும்.
சியோமி 13 அல்ட்ராவின் மற்ற அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 360ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் உடனான 6.73-இன்ச் அமோஎல்இடி WQHD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) அடிப்படையாக கொண்டு MIUI 14 உடன் வருகிறது.
மேலும் இந்த லேட்டஸ்ட் சியோமி ஸ்மார்ட்போன் ஆனது அட்ரெனோ 740 ஜிபியு உடனான 4nm ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ( Qualcomm Snapdragon 8 Gen 2 chipset) மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான LPPDR5X ரேம் மற்றும் 1டிபி வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜுடன் வருகிறது.
கடைசியாக சியோமி 13 அல்ட்ரா, 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. சியோமி நிறுவனத்தின் கூற்றுப்படி, இதன் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சொல்யூஷன் ஆனது வெறும் 34 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.
சியோமி 13 அல்ட்ரா விலை மற்றும் விற்பனை: சீனாவில் பிளாக், ஒயிட் மற்றும் க்ரீன் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியோமி 13 அல்ட்ரா மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். 12ஜிபி + 256ஜிபி வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.71,600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் 16ஜிபி + 512ஜிபி ஆப்ஷனின் விலை தோராயமாக ரூ.77,500 ஆகவும், டாப்-ஆஃப்-லைன் 16Gஜிபி + 1டிபி வேரியண்ட்டின் விலை சுமார் ரூ. 87,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது எப்போது இந்தியா உட்பட மற்ற உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவல்களை சியோமி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications








