சிகரெட் பாக்கெட்டானு கேப்பீங்க! அவ்ளோ சின்ன போன்ஸ்! ஆனால், வேற மாதிரி இருக்கும்!
என்னதான், புதுப்புது டிசைன்களில் ஸ்மார்ட்போன்கள் வந்தாலும், சிலருக்கு ரெட்ரோ டிசைன் மீதான ஈர்ப்பானது, குறையவே குறையாது. அந்த போன்களில், 4ஜி அம்சம் மட்டும் இருந்தால்போதும், யோசிக்காமல் வாங்கிவிடலாம் என்று கோடிக்கணக்கானோர் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு இந்த 2 போன்கள் சிம்மசொப்பனமாக இருக்கும்.
நோக்கியா 2660 ஃபிளிப் (Nokia 2660 Flip), யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி ஸ்டார் (Unihertz Jelly Star) ஆகிய இரண்டு போன்கள் ரெட்ரோ டிசைனில், இன்றைய ஸ்மார்ட்போன்களில் வரும் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், ஜெல்லி ஸ்டார் போன் உலகிலேயே மிகச்சிறிய ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போனாகும். இப்படி பல்வேறு அம்சங்களை, இந்த இரண்டு போன்களும் கொண்டுள்ளன. இதன் முழு அம்சங்கள் பின்வருமாறு.

நோக்கியா 2660 ஃபிளிப் அம்சங்கள்: இந்த போன் 2.8 இன்ச் கியூவிஜிஏ (QVGA) பிரைமரி டிஸ்பிளே மற்றும் 1.77 இன்ச் செகண்டரி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த செகண்டரி டிஸ்பிளே ஃப்ரன்ட் கவர் பேனலில் (Front Cover Panel) இடம்பெற்றிருக்கும். அதில் நோட்டிஃபிகேஷன்களை பார்த்துக்கொள்ளலாம். இந்த போனில் 0.3 எம்பி கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் வருகிறது.
இந்த நோக்கியா 2660 ஃபிளிப் போன் எஸ்30பிளஸ் (S30+) ஓஎஸ் உடன் யுனிசோக்டி107 எஸ்ஓசி (UnisocT107 SoC) சிப்செட் கொண்டுள்ளது. 48 எம்பி ரேம் + 128 எம்பி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. 32 ஜிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு பயன்படுத்த முடியும். 2.75W சார்ஜிங் உடன் 1,450mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி 2.0 சார்ஜிங் போர்ட் உள்ளது.

ப்ளூடூத் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 2 சிம் கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் 4ஜி சிம் சப்போர்ட் உள்ளது. ஃஎப்எம் ரோடியோ மற்றும் எம்பி3 பிளோயர் இருக்கிறது.இந்த போன் முதலில் பிளாக் (Black), கிரீன் (Blue), ரெட் (Red) ஆகிய மூன்று கலர்களில் அறிமுகமானது. இப்போது, லஸ் கிரீன் (Lush Green) மற்றும் பாப் பிங்க் (Pop Pink) ஆகிய 2 கலர்களில் மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பட்டன்கள் பெரிதாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போனின் விலையில் பொறுத்தவரையில், ரூ. 4,699ஆக உள்ளது. இந்தியாவில், புதியாக அறிமுகம் செய்யப்பட்ட கலர்களில் விற்பனைக்கு வரவில்லை. அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரும் என்று நோக்கியா பிரியர்கள் வெகுவாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஜெல்லி ஸ்டார் அம்சங்கள்: இந்த போன் 3.0 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. 48 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆண்ட்ராய்டு 13 உடன் மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. 10W சார்ஜிங் உடன் 2000 mAh பேட்டரி வருகிறது.

டூயல் நானோ சிம் (Nano SIM) கார்டு வசதி உள்ளது. 4G சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பேக் மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Back Mounted Fingerprint Sensor) வருகிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. 3.5மிமீ ஆடியோ ஜேக் வருகிறது. ஃஎப்எம் ரோடியோ (FM Radio) உள்ளது. இந்த போன் ரெட் (Red) மற்றும் ப்ளூ (Blue) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த போனின் மொத்த எடையே 116 கிராம் மட்டுமே இருக்கிறது. இந்த போன் கிக்ஸ்டார்டர் (Kickstarter) தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஹாங்காங்கில் மட்டுமே விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில், இந்தியாவில் வெளியாகும். இந்த போனின் விலையை பொறுத்தவரையில், 1,329 ஹாங்காங் டாலருக்கு (Hong Kong Dollar) வந்துள்ளது. இந்த விலை, இந்திய மதிப்பில் ரூ.17,000 ஆகும்.


Click it and Unblock the Notifications