இம்மாதம் இந்தியாவில் கலக்கலாக களமிறங்கிய ஸ்மார்ட்போன்கள்!!

|

இந்த மாதம் டெக்னாலஜி உலகிற்க்கு மிக முக்கியமான மாதம் எனலாம். ஏனென்றால் இந்த மாதம் பெர்லினில் நடந்த IFA 2013 வர்த்தக விழாவில் தொடங்கி இன்று வரை பல முன்னனி நிறுவனங்களின் படைப்புகள் வெளியாகியுள்ளன.

சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்கள் பெரிய சைஸ் ஓஎல்ஈடி டிவிகளையும் வெளியிட்டனர். ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது முன்னனி நிறவனங்களின் ஸ்மார்ட்போன்கள். சாம்சங், ஆப்பிள், நோக்கியா, சோனி போன்ற முன்னனி நிறுவனங்களின் டாப் ஸ்மார்ட்போன்கள் இம்மாதம் இந்தியாவில் வெளியாகியுள்ளன.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்சை வெளியிட்டது. நோக்கியா நிறுவனம் 41 மெகாபிக்சல் கேமரா கொண்ட நோக்கியா லூமியா 1020 மொபைலை வெளியிட்டது. சோனி நிறுவனம் 20 மெகாபிக்சல் கேமரா கொண்ட எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போனை வெளியிட்டது.

பல மாதங்களுக்கு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C என இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை ஆதிகாரபூர்வமாக தொடங்கவில்லை என்றாலும் இந்த ஐபோன்களின் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. இம்மாதம் வெளியான் டாப் சூப்பர் ஸ்மார்ட்போன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1

#1

4.5இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன்
வின்டோஸ் 8 ஓஎஸ்
1.5 GHz டியுல் கோர் பிராசஸர்
41 மெகாபிக்சல் கேமரா
1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
32ஜிபி மெமரி
7ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்
3ஜி,4ஜி wi-fi
158 கிராம்
10.4mm
2000mAh பேட்டரி

#2

#2

நோக்கியா லூமியா 1020வில் மிகப் பெரிய பிளஸ் பாயிண்டாக அமைவது அதன் 41 மெகாபிக்சல் கேமரா தான். இதில் உள்ள ஜூம் டெக்னாலஜி நம்மை வியக்க வைக்கிறது. நோக்கியா லூமியா 1020 ரெவலூஸ்னரி சாப்ட்வேர் போன்ற கேமரா டெக்னாலஜி கொண்டுள்ளது.

#3

#3

இதில் இமேஜ் ஸ்டெப்லைசேஷன் எனும் புதிய டெக்னாலஜி உள்ளது. இதன் மூலம் குறைந்த வெளிச்சத்திலும் நல்ல படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம். நோக்கியா லூமியா 1020யில் ஒரு போட்டோவை நீங்கள் பல பரிமாணங்களில் எடிட் செய்யலாம்.

#4

#4

நோக்கியா லூமியா 1020 வில் ஒரு கிளிக் செய்தால் இரண்டு போட்டோக்கள் எடுக்கும். ஒரு போட்டோ ஹை ரெசலூஸனில் எடுக்கப்படும் மற்றொன்று 5 மெகாபிக்சல் படமாக எடுக்கப்படும். இந்த படத்தை நீங்கள் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தலாம்.

#5

#5

இதில் எல்ஈடி பிளாஷ் மற்றும் ஜெனான் பிளாஷ் உள்ளது. வீடியோ எடுப்பதற்க்கு எல்ஈடி பிளாஷும் போட்டோ எடுப்பதற்க்கு ஜெனான் பிளாஷும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நோக்கியா லூமியா 1020 1/16,000 ஷாட் ஷட்டர் ஸ்பீடு திறன் கொண்டுள்ளது.

#6

#6

நோக்கியா லூமியா 1020யில் நீங்கள் தெளிவான ஹச்டி வீடியோக்களை படம் பிடிக்கலாம். நோக்கியா லூமியா 1020யில் உள்ள ஸ்டிரியோ சவுண்டு சிஸ்டம் உங்கள் காதுகளுக்கு புது விருந்து அளிக்கும். வின்டோஸ் 8 ஓஎஸ் இதில் உள்ளது. வின்டோஸ் எம்எஸ் ஆபீஸ் உட்பட 165,000 அப்ளிகேசன்களை இதில் பயன்படுத்தலாம்.

#7

#7

5.7இன்ஞ் 1080p சூப்பர் அமோலெட் பேனல் கொண்ட கேலக்ஸி நோட் 3 1.9GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிரசாஸருடன் வந்துள்ளது.

#8

#8

13 மெகாபிக்சல் கேமரா, 2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா உள்ளன. ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கேலக்ஸி நோட்3யில் 3ஜிபி ராம் உள்ளது.

#9

#9

கேலக்ஸி நோட்3யில் 4k வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32ஜிபி மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மெமரியுடன் கிடைக்கிறது.

#10

#10

IR LED, WiFi 802.11a/b/g/n/ac, MHL 2.0, புளுடூத் 4.0, 3,200mAh பேட்டரி, LTE Cat4 support apart DC-HSPA+ 42Mbps GSM / EDGE ஆகிய சிறப்புகள் இதில் உள்ளன

#11

#11

கேலக்ஸி நோட்3 லெதர் பினிஷிங்குடன் அழகிய வடிவில் வந்துள்ளது. இதன் கவர்கள் கண்களை கவரும் வகையில் 10 வண்ணங்களில் உள்ளன.

#12

#12

5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,
2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
20.7 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,000mAh பேட்டரி

#13

#13

அழகாக டிஸைன் செய்யப்பட்டுள்ள சோனி எக்ஸ்பீரியா Z1 வாட்டர் புரூப் டெக்னாலஜி கொண்டுள்ளது. இதில் உள்ள 5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளேவில் படங்களை தெளிவாக பார்க்கலாம்.

#14

#14

இதில் உள்ள 20.7 மெகாபிக்சல் கேமரா மூலம் குவாலிட்டியான போட்டோக்களை எடுக்கலாம். சோனி எக்ஸ்பீரியா Z1ல் புதுமையான கேமரா லென்ஸ் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

#15

#15

2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர் மற்றும் 2ஜிபி ராம் ஸ்மார்ட்போனின் வேகத்தை அதிகரிக்கும்.

#16

#16

ஐபோன் 5S ஏ7 சிப் 64 பிட் ஆர்கிடெக்ச்சர் கொண்டுள்ளது, இந்த சிப் கொண்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் இது தான். இதன் கிராபிக்ஸின் இயக்கம் பழைய ஐபோன் 5யை இரண்டு மடங்கு வேகமாக இருக்கும். ஐபோன் 5Sல் உள்ள CPUவின் இயக்கம் பழைய ஐபோன்களை விட 56 மடங்கு வேகமாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

#17

#17

ஆப்பிள் ஐபோன் 5Sல் உள்ள மிகப்ரபெரிய சிறப்பம்சம் இதில் உள்ள பிங்கர் பிரிண்ட் சென்ஸார்தான். நீங்கள் உங்கள் கைரேகையை வைத்து போனை அன்லாக் செய்யலாம். 360டிகிரியில் இது ஸ்கேன் ஆகும். பிங்கர் பிரின்ட் ஆக்சஸ் ஐடியூன்களில் ஆப்ளிகேஷன் மற்றும் மியூசிக் போன்றவைகளை டவுன்லோட் செய்யவும் பயன்படும்.

#18

#18

8மொகபிக்சல் கொண்ட ஐசைட் கேமரா இதில் உள்ளது. 5-element f/2.2 aperture லென்ஸ் டெக்னாலஜியை ஆப்பிள் இதில் டிஸைன் செய்துள்ளது. இதில் உள்ள ஆக்டிவ் சென்ஸார் ஏரியா ஐபோன் 5யை விட 15 சதவீதம் பெரிதாக இருக்கும். ஆப்பிள் ஐபோன் 5Sல் இரண்டு எல்ஈடி பிளாஷ்கள் உள்ளன. இந்த கேமரா ஒரு வினாடிக்கு 10 போட்டோக்களை எடுக்கும் திறன் கொண்டது.

#19

#19

ஐபோன் 5Sல் புதிதாக மோஷன் M7 பிராசஸர் என்ற புதிய பிராசஸர் இணைக்கப்பட்டுள்ளது. accelerometer, gyroscope, மற்றும் compass சென்ஸார் போன்றவைகளை ஏ7 பிராசஸரின் உதவி இல்லாமல் இந்த பிராசஸர் பார்த்துக்கொள்ளும்.

#20

#20

1.2மெகாபிக்சல் ஹச்டி பிரண்ட் கேமராவை ஐபோன் 5S கொண்டுள்ளது. இதில் BSI சென்ஸார் உள்ளது, இது குறைந்த வெளிசத்தில் படங்களை பிடிக்க உதவும். ஐபோன் 5Sல் 4ஜி சேவைகளை பயன்படுத்தலாம். இதில் 13 LTE பேன்டுகள் உள்ளன. iWork, iLife மற்றும் iMovie போன்ற அப்ளிகேஷன்கள் ஐபோன் 5Sல் இலவசமாக வருகின்றன.

#21

#21

ஆப்பிள் ஐபோன் 5S, சில்வர், கோல்டு மற்றும் கிரே என மூன்று வண்ணங்களில் வருகிறது. இந்த ஐபோனின் பாடி அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட விதம் மிகவும் அழகாக உள்ளது. ஐபோன் 5S மெலிதாகவும் உள்ளது.

#22

#22

ஐபோன் 5Sல் ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 உள்ளது. இது 64 பிட் ஏ7 சிப் உடன் மேலும் போனின் இயக்கத்தை சிறப்பாக்குகிறது. ஆப்பிள் ஐபோன் 5S 250 மணி நேரம் ஸ்டான்டு பை பேட்டரி திறன் கொண்டது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற ஐபோன்களை விட இதன் பேட்டரி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

#23

#23

ஆப்பிள் ஐபோன் 5C இளைஞர்களை கவரும் வகையில் அழகிய டிஸைனுடன் பல வண்ணங்களில் உள்ளது. பாலிகார்பனேட் பிளாஸ்டிக் கொண்ட ஐபோன் 5C பச்சை, வெள்ளை, புளு, பிங் மற்றும் மஞ்சள் என 5 வண்ணங்களில் உள்ளது. ஐபோன் 5C பெயரில் உள்ள c என்ற எழுத்து colourயை குறிக்கிறது எனலாம்.

#24

#24

ஐபோன் 5C, 4 இன்ஞ் ரெடினா டிஸ்பிளே மற்றும் AX6 சிப்செட் கொண்டுள்ளது. இதில் 8மெகாபிக்சல் கேமரா மற்றும் புதிய ஹச்டி பிரண்ட் கேமரா உள்ளது. ஐபோன் 5cல் ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 இருப்பது மேலும் இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

#25

#25

ஆப்பிள் ஐபோன் 5C, 10 மணி நேரம் 3ஜி டாக்டைம் பேட்டரி திறன் கொண்டுள்ளது. இதில் 4G LTE கனெக்டிவிட்டி உள்ளது. ஐபோன் 5c, 16ஜிபி மற்றும் 32ஜிபி என இரண்டு மாடல்களில் வருகிறது.

#26

#26

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்சில் 320*320 பிக்சல்ஸ் ரெசலூஸன் கொண்ட 1.63 இன்ஞ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே உள்ளது.

#27

#27

800MHZ பிராசஸர், 512எம்பி ராம், 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளன.

#28

#28

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் 1.9மெகாபிக்சல் கேமரா மற்றும் 315mAh பேட்டரி கொண்டுள்ளது.

#29

#29

இந்த ஸ்மார்ட்வாட்ச் உள்ள ரப்பர் வார் பல வண்ணங்களில் உள்ளது.

#30

#30

இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள சிறப்பான விஷியம், சாம்சங் நிறுவனம் 70க்கும் அதிகமான அப்பிளிகேஷன் தயாரிப்பவர்களுடன் இணைந்து நிறைய அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும் வகையில் ஸ்மார்ட்வாட்ச்சை உருவாக்கியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X