சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ்: கடந்து வந்த பாதைகள்

|

கடந்த 4 முதல் 5 வருடங்களில் ஸ்மார்ட்போன் தொழில்துறையில் உள்ள பல்வேறு துறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்களின் விளைவாக, அதில் ஒரு அபரிமிதமான வளர்ச்சியை காண முடிகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ்: கடந்து வந்த பாதைகள்

கண்டுபிடிப்பு என்று வரும் போது, முன்னணியில் செல்லும் சாம்சங் நிறுவனம், தனது மொபைல்போன்களில் ஏதாவது புதிய காரியத்தை முயற்சிக்க தவறுவதில்லை. மேலும், விலை, இடைப்பட்ட நிலை மற்றும் உயர்நிலை என்று எல்லா பிரிவுகளில் உட்படும் மொபைல்போன்களையும் தயாரிக்கும் ஒருசில ஓஇஎம்-களில் சாம்சங் நிறுவனமும் ஒன்றாக திகழ்கிறது.

இந்நிறுவனம், கேலக்ஸி எஸ் சீரிஸில் தனது புதிய காரியங்களை அறிமுகம் செய்யும் முன், முன்னணி உயர்நிலை தயாரிப்புகளில் அவற்றை சோதித்து பார்க்கிறது. எனவே சாம்சங் எஸ் சீரிஸ் கடந்த வந்த பாதைகளில் அதற்கு ஏற்பட்ட பரிணாம மாற்றங்களைத் தொகுத்து, இந்தக் கட்டுரையில் வழங்குகிறோம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்

கடந்த 2010 இல் கேலக்ஸி எஸ் ஃபோன் அறிவிக்கப்பட்டது முதல், சாம்சங் நிறுவனத்தின் வெற்றிகரமான பாதை ஆரம்பித்தது. அப்போது, இந்த ஸ்மார்ட்போன் ஒரு 4 இன்ச் சூப்பர் அமோல்டு திரையைப் பெற்று, இந்த ஃபோனில் உள்ளூர் தயாரிப்பான ஹம்மிங்பேர்டு சிப்செட் சேர்க்கப்பட்டு, சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு சிறந்த தயாரிப்பாக அமையவில்லை என்றாலும், இப்போது நாம் அறிந்த பல பிரபலமான ஸ்மார்ட்போன்களுக்கான அடித்தளமாக இந்த ஸ்மார்ட்போன் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ் II

சாம்சங் கேலக்ஸி எஸ் II

கேலக்ஸி எஸ் சீரிஸின் இரண்டாவது முன்னணி தயாரிப்பான இது, கடந்த 2011 ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிடப்பட்டு, கேலக்ஸி எஸ் ஸ்மார்ட்போனுக்கு அடுத்தப்படியாக வந்தது. கேலக்ஸி எஸ் II என்று பெயரிடப்பட்ட இது, 2012 மொபைல் வோல்டு காங்கிரஸில் "ஸ்மார்ட்போன் ஆப் த இயர்" விருதைப் பெற்றதாகும். இந்தக் காலக்கட்டத்தில் இருந்த ஸ்மார்ட்போன்களிலேயே மிகவும் தடிமன் குறைந்ததாக இருந்த இது, 8.49மிமி அளவையும் மிக விரைவான செயலியையும் கொண்டிருந்தது. இதற்கு பாதிப்பை ஏற்படுத்திய கவர்ச்சியற்ற வடிவமைப்பைக் குறித்து, சாம்சங் நிறுவனம் புரிந்து கொள்வதற்கு நீண்டகாலத்தை எடுத்து கொண்டது.

நீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..? Simple tips
சாம்சங் கேலக்ஸி எஸ் III

சாம்சங் கேலக்ஸி எஸ் III

கடந்த 2012 மே 22 ஆம் தேதியை ஓட்டி அறிமுகம் செய்யப்பட்டஇந்த கேலக்ஸி எஸ் III ஸ்மார்ட்போன், பிளாஸ்டிக் பாடியைக் கொண்டிருந்ததால் 2012-யைப் பொறுத்த வரை தரத்தில் சிறந்த சாதனமாக இருக்கவில்லை. ஆனால் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட டச்விஸ் யூஐ மூலம் அளிக்கப்பட்ட அதிவேக செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை அளித்தது.

500% கூடுதல் நன்மைகள்: பிஎஸ்என்எல் அதிரடி, ஜியோவை தூக்கிப்போடுங்க.!500% கூடுதல் நன்மைகள்: பிஎஸ்என்எல் அதிரடி, ஜியோவை தூக்கிப்போடுங்க.!

சாம்சங் கேலக்ஸி எஸ்4

சாம்சங் கேலக்ஸி எஸ்4

இதன் முன்னோடியின் அதே வெளிப்புற கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், உட்புறத்தில் குறிப்பிடத் தகுந்த சில முக்கிய மாற்றங்கள் அளிக்கப்பட்டு, கடந்த 2013 ஏப்ரல் 27 ஆம் தேதி கேலக்ஸி எஸ்4-யை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதில் மேம்பட்ட டச்விஸ் கொண்ட சிறந்த உட்புற கட்டமைப்பும் சில ஈர்க்கும் தன்மையுள்ள அம்சங்களும் இருந்தபோதிலும், இதன் வடிவமைப்பிற்காக விமர்சனத்திற்குள்ளானது. எனினும் வடிவமைப்பைப் பொறுத்த வரை, தனது தவறுகளை திருத்திக் கொள்ள சாம்சங் நிறுவனம் தவறியதால், அதன் பின்தோன்றல்களின் தோல்விக்கும் வழிவகுப்பதாக அமைந்தது.

சாம்சங் கேலக்ஸி எஸ்5

சாம்சங் கேலக்ஸி எஸ்5

மேற்கூறிய தவறுகளை நீக்காமல், அடுத்த ஆண்டே கேலக்ஸி எஸ்5 என்ற பெயரில் மற்றொரு முன்னணி ஸ்மாட்போனை சாம்சங் நிறுவனம் களமிறக்கி, பெரிய அளவிலான தோல்வியைச் சந்தித்தது. கேலக்ஸி எஸ் சீரிஸில் தண்ணீர் மற்றும் தூசியைத் தவிர்க்கும் அம்சங்களோடு கூடிய முதல் ஸ்மார்ட்போனாக இது வெளியிடப்பட்டது. இதில் சிறப்பான ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் அம்சங்கள் இருந்தபோதிலும், வடிவமைப்பில் இருந்த குறைபாட்டால் இந்த ஃபோன் தகுந்த வரவேற்பைப் பெற முடியாமல் போனது.

 சாம்சங் கேலக்ஸி எஸ்6 சீரிஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்6 சீரிஸ்

முந்தைய அனுபவங்களில் பாடம் கற்றுக் கொண்ட சாம்சங் நிறுவனம், ஈர்க்கத்தக்க வகையிலான வடிவமைப்புடன் கேலக்ஸி எஸ்6 மற்றும் எஸ்6 எட்ஜ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக, மேற்கண்ட இரண்டிலும், கண்ணாடி மற்றும் உலோகத்தால் உருவாக்கப்பட்டது.

செயலி மற்றும் அம்சங்கள் சிறப்பாக இருந்தபோதும், இதன் மோசமான பேட்டரி வாழ்க்கை மற்றும் நினைவாக்கத்தை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையைக் குறித்து அதிகளவில் விமர்சனத்திற்குள்ளானது. இதன் மீது எழுந்த விமர்சனங்களையும் கடந்து, இது வெளியான காலக்கட்டத்தில் இரட்டை வளைந்த திரை அம்சத்துடன் வெளியிடப்பட்ட முதல் சாம்சங் ஃபோன் என்பதோடு, முழு தொழில்துறையிலும் முதல் முறையாக இது அறிமுகம் செய்யப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி எஸ்7 சீரிஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்7 சீரிஸ்

எஸ்6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்து சிறந்த காரியங்களை எடுத்து கொண்டு, சில கவனிக்கத்தக்க மேம்பாடுகளுடன் கூடிய ஒரு ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எஸ்7 சீரிஸை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன்மூலம் அந்தக் காலக்கட்டத்தில் வெளியான சிறந்த ஸ்மார்ட்போனாக இது திகழ்ந்தது.

இதில் ஒரு அதிவேக செயலி, அட்டகாசமான கேமராக்கள் மற்றும் ஒரு ஏற்கக்கூடிய பேட்டரி வாழ்க்கை போன்ற எல்லா அம்சங்களும் காணப்பட்டது. கேலக்ஸி எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும், திரை அளவில் வேறுபட்டன. பிற்காலத்தில் அளவில் பெரிதாகவும் இரட்டை வளைந்த திரையையும் பெற்றிருந்தன.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 சீரிஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்8 சீரிஸ்

சாம்சங் எஸ் சீரிஸில் சமீபகால முன்னணி தயாரிப்பாக கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விளங்குகின்றன. இது, கேலக்ஸி எஸ் வரிசையில் 18.5:9 விகித அளவில் அமைந்த முதல் ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

இவ்விரண்டு ஸ்மார்ட்போன்களும் பேட்டரி கொள்ளளவு, பரும அளவு மற்றும் முடிவில்லாத திரையைக் கொண்ட திரை அளவு போன்றவற்றில் ஏறக்குறைய ஒத்து போகின்றன.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8பிளஸ் ஆகியவற்றில் ஒரு மிகப்பெரிய முக்கியத்துவம் மிகுந்த அம்சமாக பிக்ஸ்பை விரிச்சுவல் அசிஸ்டெண்ட் காணப்படுகிறது. மேலும் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8பிளஸ் ஆகியவற்றில் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்ய முடியும் என்பதோடு, அதை விரைவாகவும் செய்யலாம்.

மேலும் இவ்விரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கண் கருவிழி ஸ்கேனர், விரல்அடையாள ஸ்கேனர் மற்றும் முகப் பாவனை கண்டறிதல் போன்றவை, ஸ்மார்ட்போனை திறப்பதற்கு பயன்படுகின்றன என்பது மற்றொரு கவனிக்கத்தக்க அம்சமாகும்.

Best Mobiles in India

Read more about:
English summary
The smartphone industry has witnessed an amazing growth in the past four to five years with the invention of new technology in various departments. In this article, we have compiled the evolution of Samsung S series.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X