9 இந்திய மொழிகளில் நேவிகேஷன் மொபைல் அப்ளிகேஷன்!!!

Written By:

டாம் டாம் என்ற நிறுவனம் ஆன்டிராய்ட் ஓஎஸ்களில் பயன்படுத்தக்கூடிய புதிய நேவிகேஷன் மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் பெரும்பாலும் அனைத்து ஆன்டிராய்ட் ஓஎஸ் வெர்ஷன்களிலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

WVGA 800*480 பிக்சல்ஸ் ரெசலூஸன் முதல் புல் ஹச்டி 1920*1080 பிக்சல்ஸ் வரை உள்ள அனைத்து ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களிலும் இந்த அப்ளிகேஷன் இயங்கும். இந்த அப்ளிகேஷனின் அளவு 36எம்பி ஆகும். இந்த அப்ளிகேஷன் போனில் சரியாக இயங்குவதற்க்கு குறைந்த பட்சம் 880எம்பி மெமரி இருக்க வேண்டும்.

9 இந்திய மொழிகளில் நேவிகேஷன் மொபைல் அப்ளிகேஷன்!!!

இந்தியாவில் இருக்கும் 7,200க்கும் அதிகமான நகரங்கள் மற்றும் டவுன்களின் நேவிகேஷன் சேவை இதில் அளிக்கப்படும் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அப்ளிகேஷன் குறி்ப்பாக கார்களில் பயணம் செய்ய போது பயன்படுத்த மற்றும் டிரைவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

நீங்கள் மேப்பை ஸ்டோர் செய்து கொண்டு ஆப்லைனிலும் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் இந்தியன் இங்கிலீஷ் மற்றும் UK இங்கிலீஷ் மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, பெங்காளி, ஒரியா, கன்னடா மற்றும் மலையாளம் ஆகிய ஒன்பது இந்திய மொழிகளிலும் உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இந்த அப்ளிகேஷனின் விலை ரூ.2,050.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot