Home
Mobile

மிரண்டு போன மொபைல் மார்க்கெட்.. 8.5மிமீ போனில் 10000mAh பேட்டரி, 100W சார்ஜிங்.. Redmi ருத்ர தாண்டவம்!

ரெட்மி நிறுவனமானது அல்ட்ரா-லார்ஜ் பேட்டரி கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை நேர்த்தியான வடிவமைப்பின் கீழ் அறிமுகம் செய்ய உள்ளது. இப்படிப்பட்ட தனித்துவமான கலவை உடன் வரும் ஒரு புதிய ஸ்மார்ட்போன் - ரெட்மி கே90 அல்ட்ரா (Redmi K90 Ultra) மாடல் ஆகும்.

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள தகவலின்படி "பெயரிடப்படாத" ஒரு ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது 10000mAh பேட்டரி, 100W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் மற்றும் புல் ஸ்பீட் வயர்லெஸ் சார்ஜிங்கையும் வழங்கும். இவை அனைத்தும் மிகவும் ஸ்லிம் ஆன 8.5 மிமீக்கும் குறைவான அளவில் வைத்திருக்கும்.

8.5மிமீ போனில் 10000mAh பேட்டரி, 100W சார்ஜிங்.. Redmi ருத்ர தாண்டவம்!

குறிப்பிட்ட டிப்ஸ்டர் எந்த பிராண்டின் பெயரையும் அல்லது மாடல் பெயரையும் பெயரிடவில்லை, ஆனால் பல தடயங்கள் இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி கே90 அல்ட்ரா (Redmi K90 Ultra) மாடலை சுட்டிக்காட்டுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் செயல்திறனை மையமாக கொண்ட, ஒரு பிளாக்ஷிப் மீடியாடெக் டைமன்சிட்டி 9-சீரிஸ் சிப்செட்டை பயன்படுத்தும் என்றும் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் லீக் சுட்டிக்காட்டியுள்ளது.

7560எம்ஏஎச் பேட்டரி உடன் வரும் ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் (Redmi K90 Pro Max) மாடலை விட இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலை குறிக்கிறது. முன்னதாக ரெட்மி கே90 அல்ட்ரா மாடலில் 8000mAh செல் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தாலும், இப்போது ஷாவ்மீ நிறுவனமானது ஸ்லிம் ஆன ப்ரோபைல்-ஐ சமரசம் செய்யாமல் இன்னும் பெரிய 10,000mAh யூனிட்டுக்கு இடமளிக்க முடிந்துள்ளது போல் தெரிகிறது.

ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முன்னர் லீக் ஆன விவரங்களின் படி, இந்த ஸ்மார்ட்போனில் பிளாட் டிஸ்ப்ளே இடம்பெறும், இது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் LTPS ரெஃப்ரெஷ் ரேட் உடனான சுமார் 6.8X இன்ச் டிஸ்பிளேவை பேக் செய்யலாம்

இது ஒரு மெட்டல் பிரேம், அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் மேம்பட்ட நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய பேட்டரி போக்கை துரத்தும் ஒரே பிராண்ட் ஷாவ்மீ மட்டும் அல்ல. ஒன்பிளஸ் அதன் வரவிருக்கும் மிட்ரேஞ்ச் டர்போ சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு 9,000mAh பேட்டரியை பேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிற

ஜனவரி 6 அறிமுகமாகும் ரெட்மி நோட் 15 5ஜி 108 மாஸ்டர் பிக்சல் எடிஷன் (Redmi Note 15 5G 108 Master Pixel Special Edition) ஸ்மார்ட்போன்: இந்த ஸ்மார்ட்போனுக்கான பிரத்யேக மைக்ரோசைட் இப்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் நேரலையில் உள்ளது. ஆக இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அமேசான் வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இப்போதைக்கு இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் மட்டுமே டீஸ் செய்யப்பட்டுள்ளது. டீசர் வழியாக - இது கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டிருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் இடது பக்கம் க்ளீன் ஆன உள்ளது; ஆக பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்கள் வலது பக்கத்தில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு மெட்டல் ஃபிரேம் இடம்பெறலாம் என்பது போல் தெரிகிறது. இது ஒரு ஸ்லிம் ஆன டிசைனை கொண்டிருக்கும் என்பதையும் டீஸர் வெளிப்படுத்துகிறது

சமீபத்தில், எக்ஸ் தளம் வழியாக, டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (@heyitsyogesh) ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போனின் இந்தியன் வேரியண்ட்டின் முக்கிய அம்சங்களை லீக் செய்து இருந்தார். அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8-இன்ச் AMOLED டிஸ்பிளே இடம்பெறலாம்

மேலும் இது ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) இல் இயங்கும் என்றும், பெயர் குறிப்பிடப்படாத ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கேமராக்களை பொறுத்தவரை ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் 108-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா பேக் செய்யப்படலாம். இது 5500mAh க்கும் அதிகமான பேட்டரியை கொண்டிருக்கலாம். கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் ஆன்லைனில் (அமேசான் இந்தியா வழியாக) வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More from GizBot

Best Mobiles in India

English summary
Mobile Market in Shock Redmi K90 Ultra Tipped to Pack 10000mAh Battery 100W Charging in 8 5 mm Body
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X