மொபைல் இன்டர்நெட்டில் இந்தியா ஜொலிக்கிறது!!!

Written By:

இன்று ஸ்மார்ட்போன் என்ற ஒன்று வந்த பிறகு உலகமே அதற்குள் சுருங்கிவிட்டது எனலாம் அந்த அளவுக்கு அதில் நிறைய விஷயங்கள் காணப்படுகின்றன.

அதுவும் இன்றைய இளம் தலைமுறையினர் ஸ்மார்ட் போன் வைத்திருப்பதை ஒரு பேஷனாக நினைக்கின்றனர் எனலாம், அந்த அளவுக்கு இதன் தாக்கம் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது

மேலும், உலகில் விற்பனைச் சந்தை குறித்து கருத்துக் கணிப்பு மற்றும் ஆய்வு நடத்தி வரும் இப்ஸாஸ் (IPSOS) என்னும் நிறுவனம், ஸ்மார்ட் போன் வழியே இணையத்தைப் பார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, இதே வகையில் இயங்கும் அமெரிக்க மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் என அறிவித்துள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

மொபைல் இன்டர்நெட்டில் இந்தியா ஜொலிக்கிறது!!!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில், 36 சதவீதம் பேர், 18 முதல் 29 வயதினராக இருக்கின்றனர். சமூக தளங்கள் இளைஞர்களின் வாழ்வில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் இந்த அமைப்பு கண்டறிந்துள்ளது.

இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்தும் 11 கோடி பேர்களில், 6 கோடியே 20 லட்சம் பேர், பேஸ்புக் தளத்தினைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை வருடா வருடம் கூடிக் கொண்டே செல்கிறது நண்பரே.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot