ஸ்மார்ட்போன் வடிவில் ஓர் அசத்தலான டேப்லெட்!

By Karthikeyan
|
ஸ்மார்ட்போன் வடிவில் ஓர் அசத்தலான டேப்லெட்!

குழந்தைகள்கூட டேப்லெட்டுகளை நன்றாக இயக்கும் அளவிற்கு எளிய தொழில்நுட்பங்களுடன் டேப்லெட்டுகள் வருகின்றன. மேலும், டேப்லெட் கம்ப்யூட்டர்கள் மக்களின் இன்றியமையாத தேவைகளாக மாறிவிட்டன. குறிப்பாக 7 இன்ச் டேப்லெட்டுகள் இன்னும் ஒரு படி மேலே போய் அனைவரும் விரும்பக்கூடிய சாதனமாக ஆகிவிட்டன.

மேலும் பல நிறுவனங்கள் இப்போது டேப்லெட்டுகளை களமிறக்குவதால் எந்த டேப்லெட்டைத் தேர்ந்தெடுப்பு என்பதில் மக்கள் மத்தியில் சிறிய குழப்பமே எழுகிறது. ஆனால் நல்ல தரமான டேப்லெட்டுகளும் சந்தையில் உள்ளன.

சமீபத்தில் தான் இந்த டேப்லெட் ஜப்பானில் விற்பனைக்கு வந்திருக்கிறது. மேலும் இது ஒரு ஆன்ட்ராய்டு டேப்லெட் ஆகும்.இந்த ஈடன் டேப்லட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 7 இன்ச் அளவில் எல்சிடி கப்பாசிட்டிவ் தொடு திரையைக் கொண்டிருக்கிறது. இந்த திரையின் பிக்சல் ரிசலூசன் 1280 x 800.

கேமராவைப் பொருத்தமட்டில் இந்த டேப்லெட் ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகா பிக்சல் பின்பக்க கேமராவையும் அதோடு 2 மெகா பிக்சல் கொண்ட முகப்பு கேமராவையும் கொண்டிருக்கிறது. இந்த முகப்பு கேமரா எச்டி வீடியோவை பதியும் வசதி கொண்டது.

சேமிப்பு வசதிக்காக இந்த டேப்லெட் 1ஜிபி ரேம் கொண்டுள்ளது. மேலும் இதை 16 ஜிபி வரை அதிகரிக்க முடியும். அதுபோல் இந்த டேப்லெட் மைக்ரோ எஸ்டி மற்றும் ட்ரான்ஸ் ப்ளாஷ் கார்டுகளை சப்போர்ட் செய்யும்.

ப்ளூடூத் வி2.1, யுஎஸ்பி வி2.0 மற்றும் ஜிபிஎஸ் வசதி ஆகியவற்றையும் இந்த டேப்லெட் வழங்குகிறது. ஆனால் இதில் இன்ப்ரேர்டு போர்ட் இல்லை. மேலும் ஜிஎஸ்எம் மற்றும் யுஎம்டிஎஸ் போன்ற வசதிகளையும் இந்த டேப்லெட்டில் பார்க்க முடியும்.

பொழுதுபோக்கு அம்சங்களுக்காக இந்த டேப்லட் 3.5 மிமீ ஜாக், டபுள்யுஎவி சப்போர்ட் கொண்ட எம்பி3 ஆடியோ ப்ளேயர், ஸ்பீக்கர் மற்றும் வீடியோ ப்ளேயர் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டேப்லெட்டில் எச்டிஎம்ஐ அவுட், 1080பி எச்டி வீடியோ மற்றும் மினி எச்டிஎம்ஐ போன்ற வசதிகளும் உண்டு.

அடுத்ததாக இந்த டேப்லெட் 3820 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட லயன் பேட்டரியைக் கொண்டுள்ளது. இதன் விலை இப்போது ரூ.20000 ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X