ஏன்? ஏழைங்க கேமிங் போன் வாங்க கூடாதா? ரூ.15,000 போதும்.. 5 ஆப்ஷன்ஸ் இருக்கு!

|

பொதுவாக நம் நண்பர்களிடம் ஒரு நல்ல கேமிங் போன் வாங்கனும் மச்சா என்று கூறினால் போதும்,உடனே அவர்கள் உங்கிட்ட காசு நிறைய இருக்கா என்றுதான் சொல்வார்கள். ஏன் காசு நிறைய இருந்தால் தான் கேமிங் போன் வாங்க முடியுமா? ஒரு பட்ஜெட் விலையில் நம் மக்கள் கேமிங் போன் வாங்க முடியதா?

கண்டிப்பாக வாங்கலாம்

கண்டிப்பாக வாங்கலாம்

கண்டிப்பாக வாங்கலாம் மக்களே, அதாவது நீங்கள் ரூ.15,000 அல்லது ரூ.12,000 செலவு செய்தால் போதும் அருமையான கேமிங் போன்களைவாங்கிவிட முடியும். இப்போது ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5 கேமிங் போன்களை பார்ப்போம். அதில் ஒன்றை தேர்வு
செய்து வாங்கிவிடுங்கள்.

5.ரெட்மி நோட் 10எஸ் (Redmi Note 10S)

5.ரெட்மி நோட் 10எஸ் (Redmi Note 10S)

நமது பட்டியலில் 5-வது இடத்தில் இருப்பது ரெட்மி நோட் 10எஸ் தான். இந்த ரெட்மி போனை அமேசான் தளத்தில் ரூ.14,868-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் கேமிங் வசதிக்கு மிக அருமையாக பயன்படும்.

ரெட்மி நோட் 10எஸ் போன் ஆனது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் வருகிறது. குறிப்பாக இந்த போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்,5000 எம்ஏஎச் பேட்டரி, 6.43-இன்ச் டிஸ்பிளே,கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன்.

 ரெட்மி நோட் 10எஸ் கேமரா எப்படி?

ரெட்மி நோட் 10எஸ் கேமரா எப்படி?

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா ஆகிய குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக்கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

அதேபோல் இந்த ரெட்மி போன் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். 4 ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளையும்
கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்.

4.விவோ டி1 44W (Vivo T1 44W)

4.விவோ டி1 44W (Vivo T1 44W)

இந்த பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது விவோ டி1 44W ஸ்மார்ட்போன். பிளிப்கார்ட் தளத்தில் இந்த கேமிங் போனை ரூ.14,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.

குறிப்பாக விவோ டி1 44W போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன்.

சீரியஸ் மேட்டர்! முதல் வேலையா சீரியஸ் மேட்டர்! முதல் வேலையா "இதை" UNINSTALL பண்ணுங்க.. கதறும் Google!

கேமிங் சிப்செட்

கேமிங் சிப்செட்

விவோ டி1 44W போனில் கேமிங் வசதிக்கு தகுந்த சிப்செட் உள்ளது. அதாவது விவோ டி1 44W போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

மேலும் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, 44W பிளாஷ் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 3.இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ (Infinix Note 12 Turbo)

3.இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ (Infinix Note 12 Turbo)

நமது பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ போன். அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்க முடியும்.

கேமிங் பயனர்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட இந்த போன் மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, டிடிஎஸ் சரவுண்ட் சவுண்ட்டூயல் ஸ்பீக்கர் போன்ற சிறப்பான அம்சங்களை வழங்குகிறது இந்த இன்பினிக்ஸ் போன்.

இன்பினிக்ஸ் போன் கேமரா வசதி

இன்பினிக்ஸ் போன் கேமரா வசதி

இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி எஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற அசத்தலான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்.

2.போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ( POCO M4 Pro 5G)

2.போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ( POCO M4 Pro 5G)

இந்த கேமிங் போன் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். பிளிப்கார்ட் தள்த்தில் அட்டகாசமான இந்த கேமிங் போக்கோ போன் மாடலின் விலை ரூ.15,049-ஆக உள்ளது. ஆனால் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த போனை வாங்கினால் இன்னமும் கம்மி விலையில் கிடைக்கும்.

குறிப்பாக இந்த போன் 50எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது போக்கோ எம்4 ப்ரோ 5ஜி.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி சிப்செட்

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி சிப்செட்

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி கேமிங் பயனர்கள் எதிர்பார்க்கும் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 4ஜிபி ரேம், 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல அசத்தலான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த போக்கோ எம்4 ப்ரோ 5ஜி மாடல்.

1. சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி (Samsung Galaxy F23 5G)

1. சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி (Samsung Galaxy F23 5G)

நமது கேமிங்போன் பட்டியலில் முதல் (1) இடத்தை பிடித்துள்ளது சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி. அதாவது தரமான அம்சங்களுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட கேலக்ஸி எப்23 5ஜிபோனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா +2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக்கொண்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா,5000 எம்ஏஎச் பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது கேலக்ஸி எப்23 5ஜி.

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் ஆப் உட்பட அனைத்து ஆப்களையும் தடையில்லாமல் பயன்படுத்த முடியும்.

மேலும் இந்நிறுவனத்தின் One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன்.

அதேபோல் பட்டியலில் இருக்கும் இந்த 5 கேமிங் போன்களும் கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Mobile Gaming Lovers Here is the List of Top 5 Best Gaming Phones Under Rs 15000 to Buy in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X