மொபிஸ்டார் எக்ஸ்க்யூ டுயல் மற்றும் சிக்யூ: கடும் போட்டி காத்திருக்கிறது.!

மொபிஸ்டார் சிக்யூ ஃபோனில் 2.75டி வளைந்த கிளாஸ் உடன் கூடிய 5-இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே காணப்படுகிறது. எ

|

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ உடன் கைகோர்த்துள்ள மொபிஸ்டார் நிறுவனம், அதன்கீழ் குறிப்பிட்ட திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பயனர்கள் ரூ.2,200 பணத்தை திரும்ப பெற முடியும்.

வியட்நாமை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான மொபிஸ்டார், தனது செல்ஃபீ தயாரிப்புகள் வரிசையில் அமைந்த மொபிஸ்டார் எக்ஸ்க்யூ டுயல் மற்றும் சிக்யூ ஆகிய ஸ்மார்ட்போன்களுடன், போட்டி மிகுந்த இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்கி உள்ளது. இவை முறையே ரூ.7,999 மற்றும் ரூ.4,999 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் (மே, 2018) 30 ஆம் தேதி முதல் ஃபிளிப்கார்ட்டில், இந்த புதிய விலை குறைந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடங்கும்.

ஸ்னாப்டிராகன் 430  சிப்செட் வசதியுடன் மொபிஸ்டார் XQ அறிமுகம்.!

மேலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ உடன் கைகோர்த்துள்ள மொபிஸ்டார் நிறுவனம், அதன்கீழ் வரும் குறிப்பிட்ட திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பயனர்கள் ரூ.2,200 பணத்தை திரும்ப பெற முடியும். மொபிஸ்டார் செல்ஃபீ ஸ்மார்ட்போன்களில் உண்டாகும் ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் பிரச்சனைகளுக்கு உத்தரவாதம், உடைந்த ஸ்கிரீன், திரவ பாதிப்பு, பழுது பார்த்தல் மற்றும் மாற்றுதல் என்று முழுமையான மொபைல் பாதுகாப்பு திட்டம் அளிக்கப்படுகிறது. அதுவும் ரூ.99 என்ற சிறப்பு விலையில், வீட்டிற்கே வந்து இந்தச் சேவை அளிக்கப்படுகிறது.

வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே

வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே

மொபிஸ்டார் எக்ஸ்க்யூ டுயல்
மொபிஸ்டார் எக்ஸ்க்யூ டுயல் ஃபோனின் முனைகள் வட்ட வடிவிலும் கச்சிதமான முறையிலும் அமைக்கப்பட்டிருப்பதால், கையில் பிடிப்பதற்கு மிகவும் இதமாக உள்ளது. இதில் 5.5-இன்ச் முழு ஹெச்டி டிஸ்ப்ளே-யை பெற்று, 1920X1080 பிக்சல் பகுப்பாய்வு கொண்ட திரையை கொண்டுள்ளது. திரையின் விகிதம் 16:9 மட்டுமே இருப்பது வருத்தம் அளிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் பவர் பொத்தான் மற்றும் சிம் கார்டு ஸ்லாட் ஆகியவை உள்ளன. இடது பக்கத்தில் ஒலி கட்டுப்படுத்தும் பொத்தான்கள் காணப்படுகின்றன. ஃபோனின் மேற்புறத்தில் ஹெட்போன் ஜெக் மற்றும் கீழ்புறத்தில் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கிரில்கள் உள்ளன.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இந்த ஸ்மார்ட்போன் பார்வைக்கு சிறப்பாகவும் கையில் பிடிப்பதற்கு இதமாகவும் தெரிகிறது. ஆனால் இதன் வடிவமைப்பு, 2018 ஆம் ஆண்டிற்கு உகந்ததாக தெரியவில்லை. டிஸ்ப்ளே மிகவும் விரைவான மறுமொழியை அளிப்பதோடு, பார்வை கோணங்களும் சிறப்பாக உள்ளது.

மொபிஸ்டார் சிக்யூ

மொபிஸ்டார் சிக்யூ

மொபிஸ்டார் சிக்யூ ஃபோனில் 2.75டி வளைந்த கிளாஸ் உடன் கூடிய 5-இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே காணப்படுகிறது. எக்ஸ்க்யூ டுயல் போலவே, சிக்யூ ஃபோனின் டிஸ்ப்ளேயும் சிறப்பான மறுமொழியை அளிக்கிறது. ஆனால் இதுவும் 16:9 அளவிலான திரை விகிதத்தை கொண்டிருக்கிறது. ஃபோனின் வலது பக்கத்தில் ஒலி கட்டுப்பாட்டு பொத்தான்கள் மற்றும் பவர் பொத்தானும் இடது பக்கத்தில் சிம் கார்டு ட்ரே-யும் காணப்படுகிறது. மொபிஸ்டார் சிக்யூ-வை பொறுத்த வரை, ஒரு ஹைபிரிடு இல்லாத சிம் கார்டு ஸ்லாட்டும் ஒரு மைக்ரோ-எஸ்டி கார்டிற்கான ஸ்லாட்டும் பெற்றுள்ளது.

ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர்

மொபிஸ்டார் எக்ஸ்யூ டுயல்
எக்ஸ்க்யூ டுயல் ஃபோனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ஆக்டா-கோர் உடன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ரோம் காணப்படுகிறது. மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் இதை 128ஜிபி வரை விரிவுப்படுத்தி கொள்ள முடியும்.

சாஃப்ட்வேர் பகுதியை பொறுத்த வரை, தற்போது பயன்பாட்டில் உள்ள ஆண்ட்ராய்டு 7.1.2 நெவ்கட் மூலம் இயங்குகிறது. இதன்மூலம் சந்தையில் ஆண்ட்ராய்டு 8.0-வை தங்கள் ஸ்மார்ட்போனில் இதே விலையில் நிலவரத்தில் அளிக்கும் டெக்னோ, இன்ஃபினிக்ஸ் ஆகிய பிராண்டுகளுடன் கடும் போட்டியை மொபிஸ்டார் சந்திக்க வேண்டியுள்ளது.

 கேமரா:

கேமரா:

மொபிஸ்டார் எக்ஸ்க்யூ டுயல்
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 13எம்பி + செல்ஃபீக்கான ஒரு எஃப்/2.2 துளை கொண்ட 8எம்பி என்று இரட்டை கேமரா அமைப்பு காணப்படுகிறது. எக்ஸ்க்யூ டுயல் ஃபோனில் 120 டிகிரி விரிந்த கோணத்திலான கேமரா உள்ளது. பின்பக்கத்தில் எஃப்/2.0 துளை உடன் கூடிய 13எம்பி கேமரா உள்ளது.

எக்ஸ்க்யூ டுயல் ஃபோனில் உள்ள ஸ்டார்லைட் என்ற அம்சத்தை பயன்படுத்தி, வெளிச்சம் குறைந்த சூழ்நிலையிலும் வெளிச்சமான செல்ஃபீக்களை பயனர்கள் எடுக்க முடியும் என்று மொபிஸ்டார் நிறுவனம் தெரிவிக்கிறது.

மொபிஸ்டார் சிக்யூ
மற்றொருபுறம் சிக்யூ ஃபோனில் 13எம்பி செல்ஃபீ கேமரா மற்றும் ஆட்டோ ஃபோக்கஸ் மற்றும் எல்இடி பிளாஷ் உடன் கூடிய 8எம்பி பின்பக்க கேமரா காணப்படுகிறது. இதற்கு ஒரு பெரிய எஃப்/2.0 துளை அளிக்கப்பட்டுள்ளதால், அதிக அளவிலான ஒளி கேமராவில் நுழைய ஏதுவாக உள்ளது.

மேற்கண்ட இவ்விரு கேமராக்களையும் நாங்கள் சோதித்து பார்த்த போது, பகல் வெளிச்சத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சிறப்பாக வந்திருப்பதை காண முடிந்தது.

இணைப்பு மற்றும் பேட்டரி:

இணைப்பு மற்றும் பேட்டரி:

மொபிஸ்டார் எக்ஸ்க்யூ டுயலை 3,000எம்ஏஹெச் பேட்டரி இயக்குகிறது. மொபிஸ்டார் சிக்யூ ஃபோனை 3,020எம்ஏஹெச் பேட்டரி இயக்குவதோடு, அதில் சிறப்பான ஆற்றல் சேமிப்பு அம்சமும் காணப்படுகிறது. இந்த சாதனங்களின் ஒட்டுமொத்த சிறப்பம்சங்களை வைத்து பார்க்கும் போது, ஒரு நாளுக்கு பேட்டரி தாக்குபிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இவ்விரு ஃபோன்களும் வோல்டி மற்றும் நவீன வில்டி அம்சத்தை கொண்டுள்ளன. இது ஐபி மல்டிமீடியா சப்சிஸ்டம் (ஐஎம்எஸ்) கோர் நெட்வர்க் அடிப்படையில் இயங்கும் ஒரு வீடியோ அழைப்பு சேவை ஆகும்.


முடிவு
இவ்விரு ஸ்மார்ட்போன்களும் கச்சிதமான விலை குறைந்த ஃபோன்களாக தெரிந்தாலும், பிரபல பிராண்டுகளான சியாமி, ஹானர் மற்றும் பிற பிராண்டுகள், நன்கு அறியப்பட்ட ஸ்மார்ட்போன்களை சந்தையில் வெளியிட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட்போன்களை நாங்கள் பயன்படுத்திய போது, பெரிய அளவிலான எந்தொரு பிரச்சனையும் சந்திக்கவில்லை. ஆனால், இதே விலை நிலவரத்தில் உள்ள ஸ்மார்ட்போன்களான சியாமி ரெட்மீ 5ஏ, ரெட்மீ 5 மற்றும் ஹானர் 7 போன்றவை மூலம் இவை கடும் போட்டியை சந்திக்கும்.

Best Mobiles in India

English summary
Mobiistar XQ Dual and CQ First Impressions: Tough competition ahead ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X