ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.11999 க்கு 6000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
மிவி நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலான மிவி ஒன் 5ஜி (MIVI One 5G) தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.12,000 பட்ஜெட்டுக்குள் 6000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 120Hz டிஸ்பிளே, 50 எம்பி கேமரா உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. இந்த மிவி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்,
இதுபோன்ற பட்ஜெட்டில் யுனிசோக் சிப்செட் கிடைப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால், இந்த மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் 24ஆம் தேதியன்று இந்திய மார்கெட்டில் வெளியாகியது. இப்போது, விற்பனைக்கு வந்துள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக ஆர்டர் செய்து கொள்ளலாம்.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,499ஆக இருக்கிறது. இந்த விலைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தள்ளுபடியுடன் ரூ.11,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் இந்த மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. ப்ளூ (Blue), பிங்க் (Pink), கிரீன் (Green) மற்றும் பர்கண்டி (Burgundy) கலர்களில் கிடைக்கிறது. மேலும், நேவி ப்ளூ (Navy Blue) கலரிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
மிவி ஒன் 5ஜி அம்சங்கள் (MIVI One 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட்டை இந்த மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 6.75 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கேமராவை இந்த மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொண்ட மாடலாக இருக்கிறது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியுடன் இந்த மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 9.15 எம்எம் தடிமன் மற்றும் 219 கிராம் எடை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
2.5டி கவர் கிளாஸ் மற்றும் வாட்டர்டிராப் நாட்ச் கொண்ட மாடலாக இந்த மிவி ஒன் 5ஜி கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 801.11 ஏசி (Wi-Fi 802.11 ac) மற்றும் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) கொடுக்கப்பட்டு இருக்கிறது. யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications
