நாளை இந்தியாவில் களமிறங்கும் மிவி நிறுவனத்தின் முதல் 5ஜி போன்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் மிவி நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனை நாளை (செப்டம்பர் 24) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் மிவி ஒன் 5ஜி (Mivi One 5G) என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் நாளை மதியம் 12 மணி அளவில் அறிமுகமாகும். அதன்பின்பு இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.
மிவி நிறுவனம் இயர்போன், சவுண்ட்பார், ப்ளூடூத் ஸ்பீக்கர், ஹோம் தியேட்டர் சிஸ்டம் உள்ளிட்ட சாதனங்களை விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் முதல் முறையாக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

மிவி ஒன் 5ஜி அம்சங்கள் (Mivi One 5G specifications): சக்திவாய்ந்த குவால்காம்ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2 SoC) உடன் மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் இந்த போனில் அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 18 வரை ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மிவி நிறுவனம்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ஆதரவுடன் மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய மிவி போனில் உள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த ஸ்மார்ட்போனின் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி அல்லது 16எம்பி கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
எச்டி டிஸ்பிளே உடன் மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும்.
6000எம்ஏஎச் பேட்டரி உடன் மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக கூறப்படுகிறது.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மிவி ஒன் 5ஜி போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த மிவி ஸ்மார்ட்போன் ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகாகும் என்று கூறப்படுகிறது.
Mivi One 5G ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல் Mivi Care+ சேவை வழங்கப்பட உள்ளது. இந்த சேவையின் கீழ் ஒரு வருட உத்தரவாதம் கிடைப்பதுடன், இந்தியா முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட சேவை மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும், 'Replaced, not repaired' என்ற கொள்கையின் கீழ், சாதனத்தில் பிரச்சினை ஏற்பட்டால் 7 நாட்களுக்குள் மாற்றித் தரும் வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications
