Home
Mobile

நாளை விற்பனைக்கு வரும் புது 5ஜி போன்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

சில வாரங்களுக்கு முன்பு மிவி நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது மிவி ஒன் 5ஜி (Mivi One 5G) என்று அழைக்கப்படும் இந்த புதிய போன் 50எம்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் கம்மி பட்ஜெட்டில் வெளியானது.

இந்நிலையில் மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது முதல் முறையாக நாளை விற்பனைக்கு வருகிறது. அதன்படி நாளை (அக்டோபர் 8) மதியம் 12 மணி அளவில் மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும். இப்போது இந்த புதிய மிவி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நாளை விற்பனைக்கு வரும் புது 5ஜி போன்.. எந்த மாடல்?

மிவி ஒன் 5ஜி விலை
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. மேலும் இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.14,999 விலையிலும், 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.16,499 விலையில் வாங்க கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.11,999 விலையில் வாங்கிவிட முடியும்.

மிவி ஒன் 5ஜி அம்சங்கள் (MIVI One 5G Specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2 SoC) சிப்செட் உடன் மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் இந்த போனில் அட்ரினோ ஜிபியு(Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.

குறிப்பாக 6.75-இன்ச் எச்டி பிளஸ் LCD டிஸ்பிளே உடன் மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 × 720பிக்சல்ஸ், 1250 நிட்ஸ் பிரைட்னஸ்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதுவும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 18 வரை ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த போனுக்கு கிடைக்கும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

நாளை விற்பனைக்கு வரும் புது 5ஜி போன்.. எந்த மாடல்?

இந்த மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி உடன் வெளியாகி உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, க்ளோனஸ் (GLONASS), புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

மேலும் 6000எம்ஏஎச் பேட்டரி உடன் மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 219 கிராம் ஆகும். கிரீன், டார்க் ப்ளூ, ப்ளூ, பர்கண்டி, பிங்க் ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Mivi One 5G First Sale Tomorrow: Check Price, Specifications and Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X