Home
Mobile

உங்ககிட்ட Xiaomi.. இல்லனா Redmi போன் இருக்கா? உடனே Settings போங்க.. உங்களுக்காக ஒன்னு காத்திருக்கு!

உங்களிடம் சியோமி (Xiaomi), எம்ஐ (Mi) அல்லது ரெட்மி (Redmi) பிராண்டிங்கின் கீழ் வெளியான ஒரு ஸ்மார்ட்போன் உள்ளதென்றால், அதிலும் குறிப்பாக கீழ்வரும் 18 மாடல்களில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தால்.. மொபைல் செட்டிங்ஸ்-ல் உங்களுக்காக ஒன்று காத்திருக்கலாம்!

சீன நிறுவனமான சியோமி நேற்று இரவு நடந்த உலகளாவிய வெளியீட்டு நிகழ்வில் அதன் சியோமி 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களோடு சேர்த்து அதன் லேட்டஸ்ட் எம்ஐயுஐ 14 அப்டேட்டையும் (MIUI 14 Update) அறிமுகம் செய்தது. இந்த அப்டேட் முதல் கட்டமாக 18 போன்களுக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MIUI 14 அப்டேட் அறிமுகம்: எந்தெந்த சியோமி, ரெட்மி போன்களுக்கு வரும்?

MIUI 14 அப்டேட்டிற்கு தகுதியான XIAOMI போன்களின் பட்டியல்

சியோமி 12டி ப்ரோ (Xiaomi 12T Pro)
சியோமி 12எக்ஸ் (Xiaomi 12X)
எம்ஐ 11 அல்ட்ரா (Mi 11 Ultra)
எம்ஐ 11 லைட் 5ஜி (Mi 11 Lite 5G)
சியோமி 12டி (Xiaomi 12T)
சியோமி 12 லைட் (Xiaomi 12 Lite)

எம்ஐ 11ஐ (Mi 11i)
எம்ஐ 11 லைட் (Mi 11 Lite)
சியோமி 12 ப்ரோ (Xiaomi 12 Pro)
சியோமி 11டி ப்ரோ (Xiaomi 11T Pro)
எம்ஐ 11 (Mi 11)
சியோமி 12 (Xiaomi 12)
சியோமி 11டி (Xiaomi 11T)
சியோமி 11 லைட் 5ஜி என்இ (Xiaomi 11 Lite 5G NE)

MIUI 14 அப்டேட்டிற்கு தகுதியான REDMI போன்களின் பட்டியல்

ரெட்மி நோட் 10 (Redmi Note 10)
ரெட்மி 10 5ஜி (Rdmi 10 5G)
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 11 Pro+ 5G)
ரெட்மி நோட் 10 ப்ரோ (Redmi Note 10 Pro)

சியோமியின் லேட்டஸ்ட் எம்ஐம்யுஐ 14 அப்டேட் ஆனது, சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ எக்ஸ்5 ப்ரோவிலும் (Poco X5 Pro) கூட கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இது ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Xiaomi 13, Xiaomi 13 Pro மற்றும் Xiaomi 13 Lite விலை விவரங்கள்

சியோமியின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியோமி 13 சீரீஸின் கீழ் மொத்தம் 3 மாடல்கள் உள்ளன: சியோமி 13, சியோமி 13 ப்ரோ மற்றும் சியோமி 13 லைட். முதல் 2 மாடல்களும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் வருகின்றன; லைட் எடிஷனானது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட்டை பேக் செய்கிறது.

சியோமி 13-ன் பேஸிக் வேரியண்ட் இந்திய மதிப்பின்படி ரூ.87,600 க்கும், மறுகையில் உள்ள சியோமி 13 ப்ரோ வேரியண்ட் தோராயமாக ரூ.1,13,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக உள்ள சியோமி 13 லைட் சுமார் ரூ.43,800 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. சியோமி 13 ப்ரோவின் இந்திய விற்பனை, கூடிய விரைவில் அமேசான் வழியாக தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
MIUI 14 Update Released in India Here is the Full List of eligible Xiaomi Redmi and Mi Phones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X