Mi, Redmi, POCO மாடல்களுக்கு MIUI 13 அப்டேட்.! இதோ லிஸ்ட்.!

|

இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து மாடல்களும் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் MIUI 13 என்பது சியோமி நிறுவனத்தின் அடுத்தகட்ட யூஸர் இன்டர்பேஸ் ஆகும். இது பல வகையான மி, ரெட்மி, போக்கோ, பிளாக் ஷார்க் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு வர உள்ளது.

அப்டேட் 2021-ம் ஆண்டின்

ஆனால் அண்மையில் வெளியான ஒரு அறிக்கையின்படி,இந்த அப்டேட் 2021-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும் சரியான தேதி மற்றும் இதர விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

ஜூன் 2021 முதல்

ஆனாலும் இந்த அப்டேட் ஆனது ஜூன் 2021 முதல் ஸ்மார்ட்போன்களுக்கு அணுக கிடைக்கும் என்கிற "அப்டேட் ரோட் மேப்" லீக்காகி உள்ளது. பின்பு இந்த பட்டியலில் ரெட்மி நோட் 9, போக்கோ எக்ஸ் 2 மற்றும் மி 10 சீரிஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் உள்ளன.

எனவே நிறுவனத்தின்

மேலும் சியோமி நிறுவனம் அதன் கஸ்டம் MIUI 13 பீட்டா பதிப்பை விரைவில் அறிவிக்கும் என வெளியான அறிக்கை கூறுகிறது. பின்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் MIUI 12வெளியான பின்னர், MIUI ஆராய்ச்சி குழு Mi ரசிகர்களிடம் MIUI 13 பீச்சர் டிசைன் ஆய்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டது. எனவே நிறுவனத்தின் அடுத்த தலைமுறை மென்பொருளின் வளர்ச்சியானது ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பதற்கான அறிகுறியாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

ரூ. 74 விலையில் புதிய ஒன்பிளஸ் 7T வாங்கலாம்.. ஆனால், ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கு..

 ஒவ்வொரு

குறிப்பாக MIUI மென்பொருளின் ஒவ்வொரு அப்டேட்டும் சிறப்பான மேம்படுத்தல்கள், அனிமேஷன்கள் மற்றும் தனிப்பயனாக்கங்களை கொண்டு வருகிறது. மேலும் வரவிருக்கும் MIUI 13 ஆனது பல்வேறு Mi, Redmi மற்றும் Poco ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிடப்படும். அந்த பட்டியலில் இருக்கும் ஸ்மார்ட்போன் மாடல்கள் இதுதான்.

 மி ஸ்மார்ட்போன்கள்

மி ஸ்மார்ட்போன்கள்

  • Xiaomi Mi 10T Pro
  • Xiaomi Mi 10T
  • Xiaomi Mi 10T Lite
  • Xiaomi Mi Note 10 Lite
  • Xiaomi Mi 10 5G
  • Xiaomi Mi 10 Ultra
  • Xiaomi Mi Note 10
  • Xiaomi Mi Note 10 Pro
  • Xiaomi Mi 10 Youth 5G
  • Xiaomi Mi 10 Lite 5G
  • Xiaomi Mi 10 Pro 5G
  • Xiaomi Mi CC9 Pro
  • Xiaomi Mi Mix Alpha
  • Xiaomi Mi 9 Pro 5G
  • Xiaomi Mi 9 Pro
  • Xiaomi Mi 9 Explorer
ரெட்மி ஸ்மார்ட்போன்கள்

ரெட்மி ஸ்மார்ட்போன்கள்

  • Redmi K30i 5G
  • Redmi K30 5G Racing
  • Redmi Note 9 Pro
  • Redmi Note 9
  • Redmi K30 Pro Zoom
  • Redmi K30 Pro
  • Redmi Note 9S
  • Redmi Note 9 Pro Max
  • Redmi 9 Prime
  • Redmi 9i
  • Redmi 9
  • Redmi 9A
  • Redmi 9C
  • Redmi 10X Pro 5G
  • Redmi 10X 5G
  • Redmi 10X 4G
  • Redmi 9
  • Redmi K20 Pro Premium
  • Redmi K30
  • Redmi K30 5G
  • Redmi K20 Pro
  • Redmi K30 Ultra
போக்கோ ஸ்மார்ட்போன்கள்

போக்கோ ஸ்மார்ட்போன்கள்

  • Poco X3 NFC
  • Poco X3 (Non-NFC)
  • Poco M2 Pro
  • Poco M2
  • Poco F2 Pro / Poco X2 Pro
  • Poco X2
  • Poco C3
பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன்கள்

பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன்கள்

  • Black Shark 3 Pro
  • Black Shark 3
  • Black Shark 2 Pro
  • Black Shark 2
  • Black Shark 3S

Most Read Articles
Best Mobiles in India

English summary
MIUI 13 update for Mi, Redmi, POCO models! Here is the list!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X