நவீன தொழில் நுட்பங்களுடன் வரும் மிட்டாஷி மொபைல்போன்கள்

Posted By: Staff
நவீன தொழில் நுட்பங்களுடன் வரும் மிட்டாஷி மொபைல்போன்கள்

மொபைல் மார்க்கெட்டில் அடுத்து ஒரு புதிய நிறுவனம் கால் பதிக்க உள்ளது.

மிட்டாஷி பிராண்டில் இந்த நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மொபைல்கள் விரைவில் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகின்றன.

எம்ஐடி-01,  எம்ஐடி-02,  எம்ஐடி-03, எம்ஐடி-04, எம்ஐடி-05 என்ற மொபைல்களை அறிமுகம் செய்திருக்கறது.

இதில், எம்ஐடி-01 மற்றும் எம்ஐடி-02 என்ற இரண்டு மொபைல்களுமே 4.6 செ.மீ திரையை கொண்டுள்ளது.

அதோடு இந்த மொபைல்களில் சிறந்த கேமரா வசதியும், 2ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ளும் மெமரி வசதியும் உள்ளது.

எம்ஐடி-03 மற்றும் எம்ஐடி-04 மொபைலும் 5.6 செ.மீ திரை வசதியினையும் கொண்டுள்ளது.

இந்த இரண்டு மொபைல்களும் 4ஜிபி வரை மெமரி வசதியினை பெற்றள்ளது.

ஆனால் இந்த மொபல்களில் ஒரு கூடுதல் வசதியாக டியூவல் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறந்த இசையை கேட்க முடியும்.

எம்ஐடி-03 மற்றும் எம்ஐடி-04 மொபைல்கள் 1.3 மெகா பிக்ஸல் கேமரா தொழில் நுட்பத்தையும் வழங்குகிறது.

இந்த மொபைல்களின் மூலம் புளூடூத், ஜிபிஆர்எஸ் போன்ற வசதியினையும் பெற முடியும்.  எம்ஐடி-03 மற்றும் எம்ஐடி-04 மொபைல்களில் 1,300 எம்ஏஎச் பேட்டரி வசதியினையும் உபயோகிக்கலாம்.

மிட்டாஷியின் இன்னொரு மொபைலான எம்ஐடி-05 மொபைல் 5.9 செ.மீ திரையையும், கியூவர்டி கீப்பேட் வசதியினையும் கொடுக்கிறது.

இந்த மொபைலின் மூலம் சோஷியல் நெட்வொர்க் தொழில் நுட்பத்தையும் பெற்று பயனடைய முடியும்.

இந்த மொபைல்களை குறைந்த விலையில் வெளியிடுவதாக உள்ளது மிட்டாஷி நிறுவனம்.

ஆனால் மிட்டாஷியின் படைப்பான எம்ஐடி-01, எம்ஐடி-02, எம்ஐடி-03, எம்ஐடி-04, எம்ஐடி-05 மொபைல்களின் விலை இன்னும் வெளிவரவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்