மினிமலிஸ்ட் ஐடியா.. இப்படியொரு Mobile வாங்க தைரியம் வேண்டும்.. Offone எளிமையின் உச்சம்.. யாரு வாங்க போறீங்க..
மினிமலிஸ்ட் (Minimalist) ஐடியாவை வைத்து உருவாக்கப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் சாதனம் தான் இந்த ஆஃப்போன் மொபைல் (Offone mobile). இதேபோல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வித்யாசமான ஸ்மார்ட்போன் தான் மினிமல் போன் (Minimal Phone).
மினிமலிஸ்ட் (minimalist) என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன தெரிந்தால், இந்த போன்களுக்கு இதை விட சரியான பெயர் அமையாது என்று நீங்களே கூறுவீர்கள். மினிமலிஸ்ட் என்ற வார்த்தைக்கான அர்த்தம், ஒரு நபர் அவர் செய்யும் செயல் மற்றும் விரும்பும் விஷயங்களில் எளிமையை விரும்புபவர்கள் என்பதை இந்த மினிமலிஸ்ட் என்ற வார்த்தை குறிப்பிடுகிறது. எளிமைக்கு அடையாளம் தான் மினிமலிஸ்ட் என்ற வார்த்தை.

மினிமலிஸ்ட் ஐடியாவில் உருவான ஆஃப்போன் மற்றும் மினிமல் போன் (Offone and a Minimal phone based on a minimalist idea):
புதுமைக்கு பஞ்சமே இல்லாத இந்த உலகில், இதுவரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாத வகையில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் (smartphone) சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை மினிமல் போன் (Minimal phone) என்று அழைக்கிறார்கள். இதன் அறிமுகம் வரும் ஆகஸ்ட் மாதம் 2024 இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிளாக் அண்ட் வைட் (black and white) நிறத்தில் பிரதிபலிக்கும் இ-இங்க் டிஸ்பிளேவை (e-ink display) கொண்டுள்ளது.
இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போனை பார்த்து வியக்கும் உலகிற்கு, இந்த போனின் அடிப்படை ஐடியாவே (basic concept idea) 2016 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஆஃப்போன் (Offone) என்ற சாதனத்தில் இருந்து தான் தோன்றியது என்பது இங்கு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பெரியளவில் இந்த ஆஃப்போன் ஸ்மார்ட்போனை (Offone smartphone) பற்றி மக்களுக்கு தெரியாது.
மினிமலிஸ்ட் ஐடியாவை அடிப்படையாக வைத்து, மிகவும் எளிமையாக உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் சாதனம் தான் இந்த ஆஃப்போன் மொபைல் (Offone mobile). இது பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் கைக்கு அடக்கமான தோற்றத்தில், இ-இங்க் (e-ink) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இ-இங்க் டிஸ்பிளே பற்றி தெரியாதவர்களுக்கு, இந்த டிஸ்பிளே பிளாக் மற்றும் வைட் நிறத்தில் மட்டுமே தகவலை பிரதிபலிக்கும் திறன் கொண்டது. நிறங்களை இது பிரதிபலிக்காது.

பிளாக் அண்ட் வைட் நிறத்தில் e-ink டிஸ்பிளே போன்.. விலை என்ன?
இன்னும் சுலபமாக சொல்ல போனால், தற்போதைய ஸ்மார்ட்போன்களின் காணப்படும் உயர்தர கலர் டிஸ்பிளேக்கள் (colour display) போல இது செயல்படாது. அமேசான் கிண்டல் சாதனம் (Amazon Kindle device) போன்ற டிஸ்பிளேவை இது கொண்டிருக்கும். ஆஃப்போன் சாதனமும் இதேபோன்ற மிகவும் எளிமையான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதுவொரு ஸ்மார்ட்போன் என்று விளம்பரம் செய்யப்பட்டாலும். உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்களை இதில் செய்ய முடியாது எனபதே உண்மையாகும்.
காரணம், இந்த ஆஃப்போன் மொபைல் சாதனத்தில் உங்களால் அழைப்புகளை (voice calls) மேற்கொள்ள முடியும், எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஈமெயில் (email), மேப்ஸ் (Maps), கேப் புக்கிங் (cab booking) சேவையை பயன்படுத்த முடியும். இதைத்தவிர இந்த போனில் உங்களால் வேறெந்த சேவைகளையும் பயன்படுத்த முடியாது. இதில் கேமரா கிடையாது, வீடியோ பிளேபேக் அம்சம் கிடையாது, இன்ஸ்டாகிராம் (Instagram), பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற எந்த சமூக வலைதள அணுகலும் கிடையாது.
மொபைல் என்ற சாதனத்தை எதற்காக பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்டதோ, அந்த வேலையை மட்டும் இது செய்யும். பிறருடன் உங்களை தொடர்பில் வைத்துக்கொள்ள இந்த ஆஃப்போன் சாதனம் அனுமதிக்கும். மினிமலிஸ்ட் ஆர்வர் கொண்ட நபர்கள், மற்றும் விரும்பிகளுக்கு இந்த ஆஃப்போன் மிகவும் பிடித்த சாதனமாக அமையும். இதன் விலை $125 டாலர் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவொரு கான்செப்ட் மாடல் என்பதனால் இது விற்பனைக்கு வரவில்லை. ஆனால், இதே கான்செப்டில் உருவாக்கப்பட்ட மினிமல் போன் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இந்த மினிமல் போன் சாதனம் $325 டாலர் என்ற விலையுடன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 27,000 வரை செல்கிறது. உண்மையில் இத்தகைய போனை, இந்த காலத்தில் வாங்க ஒரு தனி தைரியம் வேண்டும் தான் மக்களே.


Click it and Unblock the Notifications








