வாயடைத்து போன பயனர்கள்- மிட்-ரேன்ஜ் விலையில் அறிமுகமான Vivo Y75s 5G!

|

Vivo Y75s 5G ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC சிப்செட், 64 எம்பி டிரிபிள் ரியர் கேமராக்கள் உடன் வெளியாகி இருக்கிறது.

மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டால் அதற்கு இது சரியான தேர்வாக இருக்கும். காரணம் இதன் அம்சங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

மிட்-ரேன்ஜ் விலையில் Vivo Y75s 5G

மிட்-ரேன்ஜ் விலையில் Vivo Y75s 5G

விவோ நிறுவனம் ஒய் சீரிஸ் இன் கீழ் பல்வேறு மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வருகிறது. இதில் மிக சமீபத்திய வெளியீடாக Vivo Y75s 5G இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் தற்போது நிறுவனத்தின் சொந்த நாடான சீனாவில் அறிமுகமாகி உள்ளது. புதிய Vivo Y75s 5G ஸ்மார்ட்போனானது 64 எம்பி டிரிபிள் கேமராக்கள், மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC ஆதரவோடு வெளியாகி இருக்கிறது.

Vivo Y75s 5G அம்சங்கள்

Vivo Y75s 5G அம்சங்கள்

Vivo Y75s 5G அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் வாட்டர் டிராப் நாட்ச் வசதியோடு கூடிய 6.58 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே ஆனது 1080 x 2408 பிக்சல் தீர்மானம் மற்றும் 60Hz ரெஃப்ரஷிங் ரேட் உடன் FHD+ தெளிவுத்திறனைக் கொண்டிருக்கிறது.

Vivo Y75s 5G ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கிறது.

Android 12 OS ஆதரவு

Android 12 OS ஆதரவு

மெமரி விரிவாக்க ஆதரவுக்கு என மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இதில் இருக்கிறது. பிற விவோ போன்களை போலவே, புதிய Vivo Y75s 5G ஆனது தனிப்பயன் UI உடனான Android 12 OS மூலம் இயக்கப்படுகிறது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், Vivo Y75s 5G ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது.

அது 64 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் ஆகும்.

5,000 mAh பேட்டரி ஆதரவு

5,000 mAh பேட்டரி ஆதரவு

Vivo Y75s 5G ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 8 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்

ப்ளூடூத், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை இணைப்பு ஆதரவுகளாக இருக்கிறது. ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவும் உள்ளது.

Vivo Y75s 5G விலை

Vivo Y75s 5G விலை

Vivo Y75s 5G விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் சீனாவில் அறிமுகமாகி இருக்கிறது.

அது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும்.

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை CNY 1,899 (சுமார் ரூ.21,777) ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் CNY 2,199 (சுமார் ரூ.25,200) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது ஐரிஸ் மற்றும் ஸ்டாரி நைட் வண்ண விருப்பங்களில் வெளியாகி உள்ளது.

Vivo Y75s 5G இந்தியாவில் அறிமுகமா?

Vivo Y75s 5G இந்தியாவில் அறிமுகமா?

Vivo Y75s 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற தகவலை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவு ஸ்மார்ட்போனுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கிறது. Dimensity 700 செயலியுடன் கூடிய பல ஸ்மார்ட்போன்களை விவோ அறிமுகம் செய்து வருகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு இருக்கிறது என்பதால் எதிர்கால தேவை அனைத்தையும் இந்த ஸ்மார்ட்போன் பூர்த்தி செய்யும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Mid-range priced Vivo Y75s 5G smartphone launched with 64MP triple camera, 12GB RAM

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X