ரூ.15,000க்கு இப்படி ஒரு போனா? இத்தனை நாள் காத்திருந்தது இந்த போன் வாங்கதானா?

|

Poco M5 ஸ்மார்ட்போன் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி99 SoC மூலம் இயக்கப்படும் என்பது போக்கோ மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

Poco M5 வெளியீட்டு தேதி

Poco M5 வெளியீட்டு தேதி

Poco M5 வெளியீட்டு தேதி செப்டம்பர் 5 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலை போக்கோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

போக்கோ நிறுவனத்தின் மற்றொரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக இது அறிமுகமாக இருக்கிறது.

போக்கோ இந்தியாவின் யூடியூப் சேனல் மூலமாக இந்த வெளியீடு நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளது.

MediaTek Helio G99 SoC சிப்செட் ஆதரவு

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான போக்கோ, சமீபத்தில் ட்விட்டர் மூலமாக ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வதை உறுதி செய்தது.

இந்த பதிவில் "G99" என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இந்த ஸ்மார்ட்போன் MediaTek Helio G99 SoC மூலம் இயக்கப்படும் என்பது ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

உலகளவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்

உலகளவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்

Poco M5 செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

வெளியீட்டு நிகழ்வு Poco இந்தியாவின் அதிகாரப்பூர்வ YouTube சேனல் மூலம் நேரலை செய்யப்படும்.

வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் பெயரையோ. இந்திய விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த எந்த அறிவிப்புகளை Poco இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

G99 என குறிப்பிடப்பட்ட பதிவு

G99 என குறிப்பிடப்பட்ட பதிவு

சமீபத்தில் நிறுவனம் ஒரு எம் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக டீஸ் செய்திருந்தது. எனவே அது Poco M5 ஆக இருக்கலாம் என தகவல் வெளியானது.

மேலும் பதிப்பில் "G99" என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் MediaTek Helio G99 SoC மூலம் இயக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Poco M5 ஸ்மார்ட்போனின் இந்திய விலை

Poco M5 ஸ்மார்ட்போனின் இந்திய விலை

Poco M5 ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் Poco M5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,000 என இருக்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் அடிப்படை மாறுபாட்டு மாடலாக அறிமுகம் செய்யப்படும் என கணிக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து வெளியாகியுள்ள தகவலை விரிவாக பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் தி பாக்ஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் தி பாக்ஸ் ஆதரவு

Poco M5 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் தி பாக்ஸில் இயங்கும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது முழு எச்டி+ தெளிவுத்திறன் உடன் கூடிய 6.58 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கிறது.

முன்னதாகவே குறிப்பிட்டது போல் இந்த ஸ்மார்ட்போன் MediaTek Helio G99 SoC இயக்கப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

அதேபோல் போக்கோ எம்5 ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கிறது.

அதேபோல் 5ஜி ஆதரவுடன் கூடிய Poco M5 மாடல் சற்று உயர்ந்த விலையுடன் எதிர்காலத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Poco M5 ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு அம்சம்

Poco M5 ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு அம்சம்

ஸ்மார்ட்போனானது "சிக்-லெதர்" போன்ற பின் பேனல் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Poco M5 ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இடம்பெறலாம்.

அதேபோல் டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி5 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வு விரைவில் நடக்க இருக்கும் காரணத்தால், அதிகாரப்பூர்வ அறிமுகத்தன்று முழு அம்சங்கள் மற்றும் விலை துல்லியமாக தெரியவரும்.

Best Mobiles in India

English summary
Mid Range Price poco M5 Smartphone launch date Confirmed: Expected price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X