விண்டோஸ் மொபைல் பயனாளிகள் ஸ்கைப்-ஐ இழப்பது ஏன்?

By Super Admin
|

மைக்ரோசாப்ட் மொபைல் போன்களான விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 8 ஆகியவற்றில் ஸ்கைப் செயலி தற்போது செயல்பட்டு வரும் நிலையில் விரைவில் இந்த செயலி மேற்கண்ட வகை போன்களில் செயல்படாது என்று கடந்த மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. வரும் அக்டோபர் முதல் மைக்ரோசாப்ட் போன்களில் இவ்வகை செயலி இயங்காது என முதலில் மைக்ரோசாப்ட் முடிவெடுத்த நிலையில் தற்போது அந்த முடிவில் மாற்றம் கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் போன்களில் ஸ்கைப் செயலி வரும் 2017ஆம் ஆண்டு காலிறுதி வரை இயங்கும் என தெரிகிறது. விண்டோஸ் போன் 10 மாடல் வைத்துள்ள 20 சதவிகித பயனாளிகளுக்கு ஸ்கைப் தொடர்ந்து இயங்கும் என்றும் ஆனால் 80 சதவிகித மைக்ரோசாப்ட் முந்தைய மாடல் வைத்திருப்பவர்கள் இந்த செயலியின் பயன்பாட்டை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்டோஸ் மொபைல் பயனாளிகள் ஸ்கைப்-ஐ இழப்பது ஏன்?

அதுமட்டுமின்றி விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 8 போன் வைத்திருப்பவர்கள் ஸ்கைப் செயலியை இழப்பது போல, ஆண்ட்ராய்டு 4.0.3 மாடல் வைத்திருக்கும் பயனாளிகளுக்கும் இதுவரை விண்டோஸ் கொடுத்து வந்த ஒத்துழைப்பை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இதனால் இவ்வகை போன் வைத்திருப்பவர்களும் விண்டோஸின் பயன்பாட்டை இழக்க நேரிடும்.

சுவருக்குப் பின் இருப்பதைக் கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு.!!

விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 8 போன் வைத்திருப்பவர்கள் ஸ்கைப் செயலியை இழக்க நேரிடும் அதே நேரத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் P2P-க்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வீடியோ மெசேஜ், ஃபைல் டிரான்ஸ்பர் செய்வது உள்ளிட்ட சேவைகளை தொடர்ந்து பெறலாம். இதுகூட விண்டோஸ் நிறுவனத்தின் விற்பனை வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே வருவதால் எடுக்கப்பட்ட முடிவு என்று கூறப்படுகிறது.

பெரிய போன், பெரிய பீச்சர்கள் ஆனா விலை கம்மி தான்.!!

ஆனால் விற்பனை குறைந்து வரும் நிலையிலும் விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 8 வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளை நிறுத்துவது அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உகந்ததா? என்பதை எண்ணி பார்க்க வேண்டும். நீங்கள் இந்த கருத்தில் உடன்படுகிறீர்களா? என்பதை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யவும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Microsoft is killing Skype for Windows Phone 8.1, 8, and Android 4.0.3 users starting early 2017.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X