மைக்ரோசாப்ட் சர்பேஸ் போன்கள் அல்ல மொபைல்கள் - அசத்தலான புதிய லீக்ஸ்.!

|

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் போன் நீண்ட காலமாக இணையத்தில் பல லீக்ஸ் சுற்றுகளை உருவாக்கி வருகிறது. அதில் குறிப்பாக நிறுவனத்தின் சமீபத்திய காப்புரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அறிக்கைகள் வெளியாகி அது ஒரு மடக்கக்கூடிய தொலைபேசி என்று ஊகிக்கப்பட்டது.

இப்போது வெளியான தகவலின்கீழ் மைக்ரோசாப்ட் எடுக்கும் மொபைல் முயற்சிகளில் இருந்து எந்த மாதிரியான ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம் என்று நமக்கு ஒரு யோசனை கொடுக்கும் வகையில் உள்ளது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் போனைப் பற்றிய சமீபத்திய தகவலானது சீன யூட்யூப் வீடியோ பகிர்வு தளமான பில்லிபில்லி-யில் வெளிவந்தது. இது சில சுவாரஸ்யமான விவரங்களை வெளியிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் போன்கள் அல்ல மொபைல்கள் - அசத்தலான புதிய லீக்ஸ்!

முந்தைய வதந்திகள் மைக்ரோசாப்ட் சர்பேஸ் போன் என்று சுட்டிக்காட்டியுள்ள நிலையில், சமீபத்திய கசிவு இதை மைக்ரோசாப்ட் சர்பேஸ் மொபைல் என்று அழைக்கப்படும் என்று குறிப்பிடுகிறது. இந்த சாதனம் சர்பேஸ் பீகிங் மற்றும் சர்பேஸ் ஸ்லாவோனியா என்று இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப வகைகளின் அடிப்படையில் இந்த மாறுபாடுகள் வேறுபட்டிருக்கலாம் என நாம் எதிர்பார்க்கலாம். க்வால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்ஓசி கொண்டு சர்பேஸ் மொபைல் இயக்கப்படலாம் ஆனால் எந்த குறிப்பிட்ட செயலி மூலம் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பது இன்னும் தெரியவில்லை.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் போன்கள் அல்ல மொபைல்கள் - அசத்தலான புதிய லீக்ஸ்!

மறுபக்கம் இண்டர்நெட் முழுவதும் சுற்றுகளை உருவாக்கும் முரண்பாடான தகவல்களும் உள்ளன. சில கசிவுகள் இந்த சாதனம் ஒரு ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி கொண்டு இயங்கும் என்கிறது. மேலும் சில அறிக்கைகள் இதில் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி கொண்டு இயங்கலாம் என்று தெரிவிக்கின்றன.

இந்த தகவல்களில் சர்பேஸ் பென் ஆதரவு சார்ந்த விடயங்களும் வெளியான வண்ணம் உள்ளது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் மொபைல் ஆனது சர்பேஸ் பேனாவை ஆதரிக்கும் என்று கசிவுகள் உள்ளன. இது உண்மையானால், இது சாதனத்தின் யூஎஸ்பி (USP) ஆக இருக்கும்.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் போன்கள் அல்ல மொபைல்கள் - அசத்தலான புதிய லீக்ஸ்!

மேலும் வெளியான தகவல் கான்டினூம் மோட் கொண்டிருக்கும் அதாவது ஆன் டேபிள் ப்ராஜெக்டிங் அம்சம் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கின்றன. இது எவ்வாறு வேலை செய்யும் என்பதைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை, ஆனால் சாதனம் 185 டிகிரிக்கு முன்னால் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Microsoft Surface Mobile to support Surface Pen and 'on-table' projection. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X