சத்தமில்லாமல் MICROSOFT செய்த வேலை: தயாரானது நீங்கள் எதிர்பாத்த சாதனம்.! விற்பனை தேதி.!
சாம்சங் மற்றும் மோட்டோரோலா நிறுவனத்தைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனமும் அதன் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யத் தயாராகிவிட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் முதல் போல்டப்பில் ஸ்மார்ட்போன் சாதனமான சர்பேஸ் டுயோ மாடலை செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் களமிறக்கத் தயாராகவுள்ளது என்று அறிவித்துள்ளது.

சர்பேஸ் டுயோ போல்டப்பில் ஸ்மார்ட்போன்
மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் சர்பேஸ் டுயோ போல்டப்பில் ஸ்மார்ட்போன், மடக்கக்கூடிய இரண்டு ஸ்கிரீன் கொண்ட டிஸ்பிளேயுடன் வருகிறது. இது முற்றிலுமாக உருவாக்கப்பட்ட புதிய வகை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாகும். சர்பேஸ் டுயோ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது ஒருவழியாக விற்பனைக்குத் தயாராகிவிட்டது.

செப்டம்பர் 10 ஆம் தேதி
செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய சர்பேஸ் டுயோ ஸ்மார்ட்போன் மாடலுக்கான முன்கூடிய ஆர்டர்கள் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கின்றது, அமெரிக்காவில் வெறும் 1,399 டாலர் விலையில் முன்பதிவு செய்யக் கிடைக்கிறது. இந்தியாவில் இது எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்பது தெரியவில்லை.

இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம்
இருப்பினும் அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ள விலையை வைத்துப் பார்க்கையில், இந்திய மதிப்பின் படி இந்த புதிய சர்பேஸ் டுயோ ஸ்மார்ட்போன் ரூ.1,05,000 என்ற விலையில் இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம் என்று தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய சிறப்பம்சங்கள் மற்றும் முழு விபரங்களைப் பார்க்கலாம்.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ சிறப்பம்சங்கள்
- டூயல் 5.6' இன்ச் கொண்ட AMOLED 1350x1800 பிக்சல் டிஸ்ப்ளே
- விரிக்கும் பழுது 8.1' இன்ச் கொண்ட QHD பிளஸ் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா பாதுகாப்பு
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி மற்றும் 256 ஜிபி யு.எப்.எஸ் 3.0 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- 11 எம்பி பிரைமரி கேமரா
- 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி
- 18W பாஸ்ட் சார்ஜிங்
- 3577 எம்ஏஹெச் பேட்டரி



Click it and Unblock the Notifications