விற்பனை மந்தம்: ஸுன் மீடியா ப்ளேயர் உற்பத்தியை நிறுத்தியது மைக்ரோசாப்ட்

Posted By: Staff

விற்பனை மந்தம்: ஸுன் மீடியா ப்ளேயர் உற்பத்தியை நிறுத்தியது மைக்ரோசாப்ட்
குறிப்பாக புதிய தொழில் நுட்பம் மலிவு விலையிலும் சகல வசதிகளுடன் வந்தால் அது மக்களால் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்படும். இதில் நுகர்வோரின் அனுவபமும் மற்றும் அவர்களின் கருத்துக்களும் அந்த தொழில் நுட்பம் வெற்றி பெறுவதற்கும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

ஆனால் சிறந்த தயாரிப்புகள் தொடக்கத்தில் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நன்றாக பூர்த்தி செய்தால் அது விற்பனையில் கொடிகட்டி பறக்கும். ஆனால் தொடக்கத்திலேயே அந்த தயாரிப்பு மற்ற தயாரிப்புகளோடு போட்டியிட்டு பிரபலமாகவில்லயானால் அது விரைவில் காணாமல் போய்விடும். அந்த நிலைதான் மைக்ரோசாப்ட் ஸுன் மீடியா ப்ளேயர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மைக்ரோசாப்ட் அதிகாரப் பூர்வமாக ஸுன் மீடியா ப்ளேயர்களை தயாரிப்பதை நிறுத்தி இருக்கிறது. இந்த ஸுன் ப்ளேயர்கள் ஆப்பிளின் ஐபோடுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அது ஐபோடின் விற்பனை மற்றும் அதன் பிரபலத்தைப் பற்றி கவலை கொள்ளவில்லை. அதனால் ஸுன் வருவதற்கு முன்பாகவே எல்லா வாடிக்கையாளர்களின் கைகளிலும் ஐபோடுகள் தவழ்ந்தன.

மைக்ரோசாப்ட் தனது வீடியோ மற்றும் மீயூசிக் கண்டன்ட்களை பிரபலப்படுத்துவதற்காக விண்டோஸ் போன் இயங்கு தளங்களையும் மற்றும் எக்ஸ் பாக்ஸ் லைவையும் பயன்படுத்தவதாக கூற இருந்தது. அதனால் இது மக்களை கவரவில்லை. விண்டோஸ் போன் ஓஎஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் 360 ஆகியவற்றில் இயங்கும் மொபைல்களில் ஸுன் சாப்ட்வேர் கொடுக்கப்பட்டது.

இது மைக்ரோசாப்ட்டின் ஒரு புதிய அணுகு முறையாகும். ஏனெனில் ஏற்கனவே இப்படிப்பட்ட தொழில் நுட்பங்கள் மொபைல் போன்களில் வந்துவிட்டன. அதாவது ஆப்பிளின் ஸ்மார்ட்போன், ஐபோன், மீடியா டேப்லட் மற்றும் ஐபேட் ஆகியவை சக்கை போடு போட்டன.

மைக்ரோசாப்ட்டின் இந்த புதிய அறிவிப்பு ஸுன் ப்ளேயர்களைப் பயன்படுத்துவோருக்கு பெரிய கலவரத்தையே ஏற்படுத்தி விட்டது. ஸுன் ப்ளேயர்களுக்கு அளிக்கப்பட்ட உத்திரவாதம் மட்டும் அது முடியும் வரை தொடரும்.

குறிப்பாக ஆப்பிளின் ஐபோன் 2007ல் வந்ததிலிருந்தே ஸுன் மீடியா ப்ளேயர்கள் சரிய ஆரம்பித்துவிட்டன. இவை எல்லாவிதமான தொழில்நுட்பங்களையும் வழங்கினாலும் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறமுடியவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot