8 நாள் ஸ்டான்-பை டைம் கொடுக்கும் எக்ஸ்-78 மொபைல்!

Posted By:
    X

    8 நாள் ஸ்டான்-பை டைம் கொடுக்கும் எக்ஸ்-78 மொபைல்!
    எக்ஸ்-78 என்ற மொபைலை வெளியிட்டுள்ளது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். ஸ்லைடருடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல், டச் மற்றும் டைப் வசதியை வழங்குகிறது.

    இந்த மொபைல் கண்கவரும் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 140 கிராம் எடையை கொண்டுள்ள இந்த மொபைலை மிகவும் எளிய முறையில் கையாள முடியும்.

    எக்ஸ்-78 மொபைல் டியூவல் சிம் தொழில் நுட்பத்தினைக் கொண்டது. 2.8 இஞ்ச் திரை கொண்ட இந்த மொபைல், 240 X 320 திரை துல்லியத்தை கொடுக்கிறது.

    3.2 மெகா பிக்ஸல் கேமராவை லேசாக க்ளிக் செய்தால் போதும் புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் அழகாக பெற முடியும். மீடியா ப்ளேயர் வசதியின் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ வசதியினை எளிதாக பெற முடியும்.

    எப்எம் ரேடியோவில் வரும் பாடல்களையும் கேட்டு மகிழ முடியும். இதன் எல்ஐ-அயான் 950 எம்ஏஎச் ரிமூவபுல் பேட்டரியின் மூலம் 5 மணி நேரம் டாக் டைமும், 8 நாள் வரை ஸ்டான்-பை டைமும் எளிதாக கிடைக்கும்.

    8 ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரியை கொண்டது. இதனால் அதிக தகவல்களை சேகரித்துக் கொள்ளலாம். நிறைய வசதிகளை சொல்லிக் கொண்டு போக போக வாடிக்கையாளர்களுக்கு இதன் விலை அதிகமாக இருக்குமோ என்ற எண்ணமும் மேலோங்கும்.

    ஆனால்  மைக்ரோமேக்ஸ் எக்ஸ்-78 ரூ.5,000 விலைக்கும் குறைவாக கிடைக்கும். இதனால் இந்த மொபைலை பெற்று பயனடைவது என்பது அனைவருக்கும் சாத்தியமே.

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more