சிறந்த பேட்டரி வசதியுடன் மைக்ரோமேக்ஸ் எக்ஸ்-368 மொபைல்!

வாடிக்கையாளர்கள் டியூவல் சிம் வசதி கொண்ட மொபைல்களை அதிகம் வாங்குவதால், புதிய தொழில் நுட்பம் கொண்ட மொபைல்களும், ஸ்மார்ட்போன்களும் வெளி வந்தாலும் டியூவல் சிம் தொழில் நுட்பம் உள்ள மொபைல்களுக்கு மதிப்பு குறையாமல் இருக்கிறது. இதன் அடிப்படையில் புதிய எக்ஸ்-368 என்ற டியூவல் சிம் வசதி கொண்ட மொபைலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.
இரண்டு நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த டியூவல் சிம் வசதி கொண்ட எக்ஸ்-368 மொபைலில் 2.55 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது கியூவிஜிஏ திரை வசதியை வழங்கும். இந்த திரையின் மூலம் 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். 2 மெகா பிக்ஸல் கொண்ட இந்த கேமராவினால் சிறந்த துல்லியத்தில் புகைப்படத்தையும், வீடியோவினையும் கொடுக்க முடியும்.
எந்த மொபைலிலும் மெமரி வசதி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த எக்ஸ்-368 மொபைலில் மெமரி வசதியினை 8ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். பொழுதுபோக்கு அம்சமாக இதில் எப்எம் ரேடியோ வசதியும் உள்ளது. மல்டி மீடியா ப்ளேயர் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் ஜிபிஆர்எஸ் வசதியையும் கொடுக்கும்.
அதிக ஆற்றலை வழங்க இதில் லித்தியம் அயான் 1080 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலை ரூ.2,700 விலையில் பெறலாம்.


Click it and Unblock the Notifications