Home
Mobile

'மேக்ரோ' வசதிகளுடன் புதிய மைக்ரோமேக்ஸ் மொபைல்!

By Super
'மேக்ரோ' வசதிகளுடன் புதிய மைக்ரோமேக்ஸ் மொபைல்!

ஸ்டைலாக பல மொபைல்கள் இந்திய சந்தைக்கு வந்து கொண்டிருக்கின்றது. அதுவும் மலிவு விலையிலேயே. இது போன்ற ஸ்டைலான மொபைல்களில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், பார்ப்பவர்களால் அதை மலிவு விலை

மொபைல் என்றே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு தனது தோற்றத்தை கொண்டு அசத்துகின்றன மலிவு விலை மொபைல்கள்.

இதேபோன்று, அசத்தலான தோற்றத்துடன் எக்ஸ்-261 என்ற பட்ஜெட் மொபைலை உருவாக்கி இருக்கிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். இது 2.2 இஞ்ச் கியூவிஜிஏ கலர் டிஸ்ப்ளே கொண்டது.

டியூவல் சிம் தொழில் நுட்பத்தினை கொண்ட மொபைல் என்பதால் இது இரண்டு நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும். மலிவு விலை

மொபைல் தான் ஆனாலும் இதில் தேவையான அளவு தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்தி பயன் பெறலாம்.

மல்டி மீடியா ப்ளேயர் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த எக்ஸ்-261 மொபைலில் பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளது. ஸ்டீரியோ எப்எம் ரேடியோவின் மூலம் துல்லியமான பாடல்களையும் கேட்கலாம். ஜிபிஆர்எஸ் உள்ளதால் நெட் வசதி பற்றிய கவலையும் இல்லை.

தகவல்களை பதிவேற்றமும் பரிமாற்றமும் செய்ய பயன்படும் விதத்தில் புளூடூத் மற்றும் யூஎஸ்பி வசதியையும் இந்த மொபைல் வழங்கும்.

1,000 எம்ஏஎச் பேட்டரியினால் 4.5 மணி நேரம் டாக் டைம் பெறலாம். இதனால் தொடர்பு துண்டிக்கப்படாமல் பேசலாம். போதுமான அளவு துல்லியத்தோடு புகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியியும் இதன் 1.3 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கும்.

எக்ஸ்-261 மொபைலில் எக்ஸ்டர்னல் மெமரி 8ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். மைக்ரோமேக்ஸ் எக்ஸ்-261 மொபைல் ரூ.2,500 விலைக்கு கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X