மலிவு விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் மைக்ரோமேக்ஸ்!

புதிய ஸ்மார்டி ஏ-25 என்ற ஸ்மார்ட்போனை நாளை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்வதாக ஒரு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
டியூவல் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மிகவும் மலிவான விலை கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருக்கும். 2.8 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்டு 2.3.6 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் மலிவான விலை கொண்டதாக இருப்பினும், இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் கொண்டதாக இருக்கும் என்பதால், வைபை போன்ற வசதிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும்.
3ஜி மற்றும் ஜிபிஎஸ் தொழில் நுட்ப வசதி இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்படவில்லை. ஆனால் இதில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் நெட்வொர்க் தொழில் நுட்ப வசதியினை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்போனில் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினை எளிதாக பயன்படுத்தலாம்.
120 எம்பி இன்டர்னல் மெமரி வசதியினை எளிதாக பெறலாம். இத்தனை வசதிகளை வழங்கும் இந்த மைக்ரோமேக்ஸ் ஸ்மார்டி ஏ-25 ஸ்மார்ட்போனின் பேட்டரி வசதி பற்றியும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதில் 1,280 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 4 மணி நேரம் டாக் டைம், கிட்டத்தட்ட 1 வாரத்திற்கான ஸ்டான்-பை டைமினையும் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரம் இன்னும் சரிவர வெளியாகவில்லை என்றாலும், ரூ. 3,500 விலை கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications