விலைக் குறைப்பு செய்யும் மைக்ரோமேக்ஸ்!

தற்போது மைக்ரோமேக்ஸ் இந்த போனுக்கு அதிரடி விலை குறைப்புச் செய்திருப்பதாக தகவல்கள் பல வெளியாகி உள்ளன. அதாவது இந்த போனின் விலையைக் கணிசமாகக் குறைத்து ரூ.7,239க்கு இன்ஃபிபீம் என்ற ஆன்லைன் மூலம் விற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இந்த தகவலை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன்னும்
உறுதிப்படுத்தவில்லை.
எனினும் இந்த போனோடு ஒரு 8ஜிபி ட்ரான்சன் மெமரி கார்டையும் சேர்த்து ரூ.8,299 விலைக்கு பிலிப்கார்ட் ஆன்லைன் விற்று வருகிறது.
இந்த மைக்ரோமேக்ஸ் சூப்பர் போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டது. அதாவது ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்குதளத்தில் இயங்கும் இந்த போன் டியூவல் சிம் வசதி கொண்டது. இதன் 3.75 தொடுதிரை வசதி மிகவும் துல்லியமாக தகவல்களை வழங்கும்.
அதோடு இந்த போன் 650 மெகாஹெர்ட்ஸ் ப்ராசஸர், 3எம்பி பின்பக்க கேமரா, விஜிஎ முகப்புக் கேமரா, 3ஜி வசதி, வைபை, ப்ளூடூத், எ-ஜிபிஎஸ் சப்போர்ட், 3.8எம்எம் யுனிவெர்சல் ஜாக் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஆகிய சூப்பரான வசதிகளையும் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த போன் முக்கிய அப்ளிகேஷன்களான கூகுள் வாய்ஸ் சர்ச், சாவ்ன் மியூசிக், டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆன்லைன் நியூஸ் பேப்பர் மற்றும் நெட்கின் ஆன்டிவைரஸ் போன்றவற்றையும் சப்போர்ட் செய்கிறது.


Click it and Unblock the Notifications