ரூ.3,999 விலையில் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.3,999-ஆக உள்ளது.
இந்திய சந்தையில் மைக்ரோமேக்ஸ் நிறவனம் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் கோ ஸ்மார்ட்போன் மாடலை ரூ.3,999 விலையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சில்வர் மற்றும் தங்க நிறங்களில் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் கோ ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட சலுகையை அறிவித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் பார்ப்போம்.

டிஸ்பிளே:
மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் கோ ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் குறுஏபுயு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 480 x 854பிக்சல் திர்மானம் மற்றும் 2.5 வளைந்த கண்ணாடி பாதுகாப்பு அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

குவாட்-கோர்:
மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் கோ பொறுத்தவரை குவாட்-கோர் எஸ்சி 9832இ செயலியை அடிப்படையாக கொண்டுள்ளது, பின்பு
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு அதரவுகள் இவற்றுள் இடமபெற்றுள்ளது.

கேமரா மற்றும் விலை
இந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.3,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications